48 மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்….. அவதானமாக இருங்கள்!!

வட அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணித்தியாலங்களில் கிழக்கு மத்திய மற்றும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நன்கு விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசமாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டிற்கு கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாகவும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போதுமழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *