#VVT

LatestNewsTOP STORIES

சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடமராட்சி மீனவர்கள்!!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்களின் படகு மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் ஐந்தாவது நாளாக இன்றைய தினமும் வடமராட்சி மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். மீனவர்கள் கடந்த 31ஆம் திகதி முதல் பருத்தித்துறை – பொன்னாலை வீதியினை வழி மறித்து நேற்றைய தினம் வியாழக்கிழமை வரையில் நான்கு நாட்களாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருந்தனர். அந்நிலையில், நேற்றைய தினம் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடை Read More

Read More
LatestNews

இன்று புதிய ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்பு….. நாகமுத்து பிரதீபராஜா!!

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகே இன்று புதிய ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை குறித்து தனது முகப்புத்தக பதிவொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இது புயலாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகமாக உள்ளன. இப்புயல் எதிர்வரும் 04.12.2021 சனிக்கிழமை இந்தியாவின் விசாகப்பட்டினத்துக்கே அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலைமையின்படி இந்தப் புயலால் Read More

Read More
LatestNews

யாழ்ப்பாண கடற்பரப்பில் அடுத்தடுத்து கரையொதுங்கும் மனித உடல்கள்!!

நேற்று காலை வல்வெட்டித்துறை மணல்காடு பகுதிகளில் இரு உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதே போல், யாழ்ப்பாணம் – நெடுந்தீவு காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட, 5ஆம் வட்டாரம் திரிலிங்கபுரம் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. சடலம் குறித்த பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களால் இன்று அவதானிக்கப்பட்ட நிலையில் நெடுந்தீவு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், மேலதிக விசாரணை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு அடுத்தடுத்து சடலங்கள் கரையொதுங்கி வரும் நிலையில், Read More

Read More
LatestNews

பருத்தித்துறைக்கு வடக்கே 300 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம்!!

தென்கிழக்கு ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து பருத்தித்துறைக்கு வடக்கே ஏறத்தாழ 300 கிலோ மீற்றர் தூரத்தில் (12.3Nஇற்கும்81.2E இற்கும் இடையில்) நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலையளவில் வட தமிழ்நாட்டு கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போதுமழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் Read More

Read More
LatestNews

வல்வெட்டித்துறையில் நடந்த கொடூரம் – கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் தந்தை!!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று  நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தின் போது சுப்பிரமணியம் கிருசாந்தன் (வயது-30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தினால் படுகாயடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்ககு அழைத்துச் சென்று அனுமதித்தபோதே அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து Read More

Read More
LatestNews

யாழ். வல்வெட்டித்துறையிலும் அதிகரித்து வரும் ஆபத்து!!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் நேற்று மேலும் 40 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை வடமேற்கு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 209 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில்  40 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மூன்று நாள்களில் 88 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ். பருத்தித்துறை பகுதியிலும் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More