இன்று புதிய ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்பு….. நாகமுத்து பிரதீபராஜா!!

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகே இன்று புதிய ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை குறித்து தனது முகப்புத்தக பதிவொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இது புயலாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகமாக உள்ளன. இப்புயல் எதிர்வரும் 04.12.2021 சனிக்கிழமை இந்தியாவின் விசாகப்பட்டினத்துக்கே அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலைமையின்படி இந்தப் புயலால் எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் நேரடியான பாதிப்பு இருக்காது. எனினும் எதிர்வரும் 04.12.2021 வரை அவ்வப்போது பரவலாக மழை கிடைக்கும்.

எனினும் இன்று இரவு தொடக்கம் எதிர்வரும் சனிக்கிழமை வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியமாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *