இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளின் பிரச்சனைகள் விஷேட விவாதத்திற்காக….. ஆரம்பமானது ஐ. நா சபையின் மீளாய்வு கூட்டத்தொடர்!!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் மீளாய்வு கூட்டத்தொடர் இன்று(27/02/2023) ஆரம்பமானது. இலங்கை, எகிப்து, துர்க்மெனிஸ்தான், ஜாம்பியா, பேரு மற்றும் பனாமா உள்ளிட்ட 6 நாடுகள் தொடர்பான மீளாய்வு கூட்டத் தொடரே இன்று(27/02/2023) முதல், எதிர் வரும் மார்ச் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்நிலையில், இலங்கை தொடர்பான மீளாய்வு கூட்டத் தொடர் மார்ச் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் 3 கட்டங்களாக இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 8ஆம் திகதி இலங்கை நேரப்படி Read More

Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக ஐ.நா சபையில் “பச்லெட்டிடம்” சமர்ப்பிக்கப்பட்டது!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ‘யாஸ்மின் சூகா’ 43 பக்க அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டிடம் சமர்ப்பித்துள்ளார். குறித்த அறிக்கை நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கோட்டாபயவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கை அரச தலைவர் ஒருவருக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது விசாரணை அறிக்கை இதுவாகும். 18 முன்னாள் இராணுவ Read More

Read more

நான் பதவியை ஏற்க மாட்டேன்….. பிரதமர் ரணிலின் கோரிக்கைக்கு ஹர்ஷ டி சில்வாவின் பதில்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் இணைந்து கொள்ள போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ‘ஹர்ஷ டி சில்வா’ தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கமளித்த ஹர்ஷ டி சில்வா, “இளைஞர்கள் நேர்மையான மற்றும் வெளிப்படையான அரசியல் அமைப்பொன்றை எதிர்பார்க்கிறார்கள், அதை நான் எதிர்க்க முடியாது. மக்களின் விருப்பத்திற்கு எதிராக என்னால் செல்ல முடியாது. என்னை நிதியமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நேரத்தில் இதுபோன்ற அரசியல் விளையாட்டுகளை மக்கள் Read More

Read more

மின்னலொன்று படைத்தது புதிய சாதனை….. ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பு!!

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இந்த மின்னலின் தூரம் லண்டன் நகரில் இருந்து ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரம் வரையான தூரத்திற்கு சமமானது என அளவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி, லூசியானா மற்றும் டெக்சாஸ் முழுவதும் 770 கிலோமீட்டர் தூரம் இந்த மின்னல் தெரிந்ததாகவும் ஐ.நாவின் உலக வானிலை அமைப்பு Read More

Read more

இலங்கை “அணு ஆயுத” ஆவணத்தில் கையெழுத்திட தீர்மானம்!!

அணு ஆயுதங்களைத் தடை செய்தல் தொடர்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காகவும் அதனை ஏற்று அங்கீகரிக்கும் செயன்முறையை ஆரம்பிப்பதற்காகவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் சமர்ப்பித்த குறித்த யோசனைக்கு நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அனுமதி கிடைத்துள்ளது. அணு ஆயுதங்களைப் பரந்தளவில் தடை செய்வதற்காக உலகளாவிய ரீதியில் முதலாவது பல தரப்பு ஒப்பந்தமான அணு ஆயுதங்களைத் தடை செய்தல் தொடர்பான ஒப்பந்தம் 122 நாடுகளின் ஒத்துழைப்புடன் 2017ஆம் ஆண்டு யூலை மாதம் 07 ஆம் திகதி Read More

Read more

UN இன் 76ஆவது கூட்டடத்தொடரில் இன்று இலங்கை ஜனாதிபதியின் உரை!!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத் தொடரின் உயர்மட்ட விவாதம் நேற்று நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஆரம்பமாகியது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இம்முறை ஆரம்பமாகிய கூட்டத்தொடர், “கொவிட் 19 வைரஸ் தொற்றுப்பரவலிலிருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல், நிலைத்தன்மையை மீளக் கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது. இக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக,இலங்கை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ நியூயோர்க் Read More

Read more

இன்று ஆரம்பமாகிறது ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தொடர்!!

இன்று ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாளை 22ஆம் திகதி  விசேட உரை நிகழ்த்தவுள்ளார். அதனையடுத்து 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள உணவு மற்றும் வலு சக்தி தொடர்பான உயர்மட்ட அமர்வுகளிலும் அரச தலைவர் உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவினர் 18ஆம் திகதி நியூ யோர்க் சென்றடைந்தனர். Read More

Read more

நவம்பர் மாதத்திற்கு முன்னர் 15 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் முழுமையாக தடுப்பூசி வழங்கப்படும்!!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஐ.நா. பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி கோட்டாபய, நவம்பர் மாதத்திற்கு முன்னர் 15 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் முழுமையாக தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறைவு செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.

Read more

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை ஏற்றது இந்தியா!!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுக் கொண்டது. ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்காக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 15 உறுப்பினர் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான 5 நாடுகளை தவிர்த்து இந்தியா உள்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளன. இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒவ்வொன்றும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும். அந்த வகையில் இந்தியா இந்த மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு Read More

Read more

இலங்கை தொடர்பில் அவசர கூட்டம்! உள்நுழையுமா ஐ.நா??

தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பான அவசர கூட்டத்தில் பேசிய டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நிக்கோலாய் விலும்சன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. இலங்கையில் தமிழ் மக்களுக்கு Read More

Read more