பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் விசேட அறிக்கை!!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.   ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை பாடசாலைகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பரீட்சைகள் மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் மாணவர்களை அழைக்க அதிபர்களுக்கு அனுமதி வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

நவம்பர் மாதத்தில் பாடசாலையில் அனைத்து வகுப்புகளும் ஆரம்பம்…. அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!!

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நாடளாவிய ரீதியில் பாடசாலையில் அனைத்து வகுப்புகளையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகங்க இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே (Hesha Vithanage) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி முதல் நாடு முழுவதும் பாடசாலைகள் பல கட்டங்களில் திறக்கப்படும். தொடர்ந்து நவம்பரில் அனைத்து தரங்களும் ஆரம்பிக்கப்படும் என்றும் Read More

Read more

குறைந்தளவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை முதலில் ஆரம்பிப்பதற்கான இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது…. கல்வி அமைச்சு!!

இது தொடர்பில் கல்வி அமைச்சருக்கும் மாகாண சபை ஆளுநர்களுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 200இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்புகளையும் 100 மாணவர்களை விடக் குறைவான பாடசாலைகளின் எல்லா வகுப்புகளையும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல அளவுகோல்களின் கீழ் 3,000 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த பாடசாலைகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது தொடர்பாகவும், இந்த கலந்துரையாடலின் போது ஆளுநர்கள் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.

Read more

நாளை முதல் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி!!

பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். இதன்படி 12 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையானது நாளை (24) ஆரம்பமாக உள்ளது. கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் தடுப்பூசி வழங்கும் திட்டம் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். மேலும் குருணாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் தடுப்பூசிகள் Read More

Read more

சாதாரண தர பெறுபேறுகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி !!

2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.   செயன்முறை பரீட்சைகளை தவிர்த்து வெளியிட தீவிரமாக ஆலோசித்துவருகின்றது. இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சுக்கும், பரீட்சைகள் திணைக்களத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 622,000 மாணவர்களில், 170,000இற்கும் குறைவான மாணவர்களே, சங்கீதம், நடனம் மற்றும் சித்திரம் போன்ற செயன்முறை பரீட்சைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு, Read More

Read more

அச்சம் கொள்ளாதீர் பக்கபலமாக நாம் இருப்போம் -யாழில் அதிபர் ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட அறைகூவல்!!

ஆசிரியர்களை பாடசாலைகளுக்கு அழைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் எனினும் ஆசிரியர்கள் எவரும் பாடசாலைகளுக்கு செல்லத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய எந்தவித அவசியமும் இல்லை என்றும் அதனால் எதற்கும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் பக்க பலமாக தாம் இருப்போம் என்றும் அச் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார். இலங்கை ஆசிரியர் சங்கம் யாழ் ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் Read More

Read more

திறக்கப்படவுள்ள பாடசாலைகள்?? – கல்விஅமைச்சர் வெளியிட்ட தகவல்!!

ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை வெளிக்கள ஊழியர்களில் 83 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தடுப்பூசி இம்மாத இறுதி வாரத்தில் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் பாடசாலைகளை விரைவாக திறந்து கல்வி நடவடிக்களைத் தொடங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிடடார்.

Read more

கல்வி அமைச்சருடனான பேச்சு தோல்வி – ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு!!

கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸுடன் இன்று காலை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார். எனவே, தற்போது நடைபெற்று வரும் ஒன்லைன் மூலமான கல்விச் செயற்பாட்டை தொடர்ந்தும் புறககணிக்கவுள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாளை (22) கொழும்பில் பாரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடுகள் தொடர்பான தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண திங்கள்கிழமை (26) அமைச்சரவையில் ஒரு திட்டத்தை சமர்ப்பிப்பதாக Read More

Read more

அடாவடிகளுக்கும் ஆயுதத்திற்கும் ஆசிரியர் நாங்கள் அடிபணியமாட்டோம்- யாழில் கிளர்ந்தெழுந்த ஆசிரியர் சங்கம்!!!!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் ய்ழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை 10 மணி தொடக்கம் 11 மணிவரையாக ஒரு மணி நேரம் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.   ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியில் இராணுவமயமாக்கல், கல்வியை தனியார் மயப்படுத்தல், Read More

Read more

பகடையாக்கப்படும் 43 இலட்சம் மாணவர்களின் எதிர்காலம் – ஆசிரியர்களின் படுமோசமான செயற்பாடு!!

இலங்கையில் அனைத்து ஆசிரியர்களும் இணையவழிக் கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளமை படுமோசமான செயற்பாடாகவே கருத வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதால் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்விடயத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளும் கிடையாது. கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதற்கு 43 இலட்சம் மாணவர்களை பகடையாக வைப்பது எந்தளவுக்கு நியாயமாகும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று Read More

Read more