#tax

FEATUREDLatestNewsTOP STORIES

இன்று முதல் 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பெறுமதி சேர் வரி!!

நாட்டில் இதுவரையில் வரி விலக்களிக்கப்பட்டு வந்த 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இன்று (01/01/2024) முதல் VAT எனப்படும் பெறுமதி சேர் வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் வரை 138 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பெறுமதி சேர் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுவந்தது. எவ்வாறாயினும், அரச வருமானத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய வற் திருத்தச் சட்டத்துக்கமைய, 15 வீதமாக இருந்த வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வாகன பாவனையாளர்களுக்கு அவசர அறிவித்தல்….. போக்குவரத்து ஆணையாளர்!!

kஇலங்கையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் மத்திய மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய மாகாண போக்குவரத்து ஆணையாளர் பரமி தன்னகோன் தெரிவித்துள்ளார். இதன்படி, ஏனைய மாகாணங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்துள்ளார். இந்த புதிய கணனி பயன்பாட்டின் மூலம் இலங்கையில் உள்ள முழு வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

அரசியலில் பிரவேசிக்கும் அனைவரும் இனி வரி கட்டாயம்!!

அரசியலில் பிரவேசிக்கும் அனைவரும் வரிக் கோப்பொன்றைத் திறப்பது கட்டாயம் எனவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் போது அது ஆரம்பிக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக அமைச்சுப் பணியாளர்கள் வரிக் கோப்புகளை ஆரம்பிப்பது கட்டாயமாக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் வரி விதிக்கப்படும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

புதிய வரி அறவீட்டு முறைமைகளை பிரதமர் அறிவித்துள்ளமை நம்பிக்கையளிக்கிறது….. W.A.விஜேவர்தன!!

இலங்கை மத்திய வங்கி மீதான தேவையற்ற தலையீடுகள் நாட்டின் பொருளாதார மீட்சியைக் கேள்விக்குள்ளாக்கும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட, நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஆராயும் நோக்கிலான கலந்துரையாடலில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கருத்துக்களை பகிர்ந்த அவர், “அரச ஊழியர்களுக்கான சம்பளக்கொடுப்பனவை இடையூறின்றி மேற்கொள்வதற்கு பில்லியன் கணக்கான ரூபாய்களை அச்சிடவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட கருத்து பல்வேறு கரிசனைகளைத் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சில பொருட்களின் இறக்குமதிகான “விசேட பண்டவரி”யானது ‘200%’ ஆக அதிகரிப்பு!!

இறக்குமதி  செய்யப்படும் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டவரியை நிதி அமைச்சு 100% வீதமாக நேற்று(01/06/2022) முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் குறித்த பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள நிதியமைச்சு அவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த வரிகளுக்கே மீண்டும் 100% வரி விதித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் சீஸ் மீது விதிக்கப்படும் மேலதிக கட்டணம் 100% ஆக அதிகரிக்கும். அதாவது, 1000 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீஸின் வரி இப்போது ரூ. 2000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரிஅதிகரிப்பு!!

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரி (VAT) 12% ஆக அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன், தொலைத்தொடர்புகள் தீர்வை 15% ஆகவும் அதிகரிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More
LatestNewsTOP STORIES

மருந்துகளின் விலையை 20% உயர்த்த அனுமதி!!

மருந்துப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மருந்துகளின் விலையை 20% உயர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஏற்கனவே விலை உயர்த்தப்பட்ட மருந்துகளுக்கு இந்த விலை உயர்வு பொருந்தாது என்று NMRA தெரிவித்துள்ளது. இவ்வாறு நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாட்டின் சகல பகுதிகளிலும் ஆர்ப்பாடங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNewsTOP STORIES

பால், பழம் உட்பட இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு விசேட வரி….. மீண்டும் விலையேற்றம்!!

பழங்கள் மற்றும் பால் பொருட்கள் உட்பட இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு விசேட வரி விதிக்கப்பட்டுள்ளது. விசேட வரி விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம். இவ் பட்டியலில் தயிர், வெண்ணெய் மற்றும் சீஸ் ஆகியவை அடங்கும். இதேவேளை, திராட்சைகள், ஆப்பிள்கள் மற்றும் ஓரஞ்சுகள் உட்பட பல பழங்களும் இந்த பட்டியலினுள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சந்தையில் மீண்டும் குறித்த பொருட்களின் விலைமேலும் அதிகரிக்கும் என Read More

Read More
LatestNews

முடிவிற்கு வரும் வாகனதாரர்களுக்கு கொடுக்கப்படட கால அவகாசம்!!

நாட்டில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் காலாவதியான போக்குவரத்து அபராத கட்டணங்களைச் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இம்மாதம் 14ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தபால்மா அதிபர் அறிவித்துள்ளார். அதன்படி, ஒக்டோபர் 31ஆம் திததி தொடக்கம் போக்குவரத்து குற்றங்களுக்காக வழங்கப்படும் அபராத பற்றுச்சீட்டுக்கான மேலதிக அபராதக் கட்டணம் எதிர்வரும் 14ஆம் திகதி வரை அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 28 நாட்கள் வரை மேலதிக அபராத கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Read More
LatestNews

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று விசேட நடைபெறவுள்ள கூட்டம்…… எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவுகள்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ (Gotabaya Rajapaksha) தலைமையில் இன்று விசேட கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பால் மா, எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட பல பொருட்களின் விலை உயர்வு குறித்து இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இன்றைய கலந்துரையாடல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma), “பல நாட்களாக உள்ள பால் Read More

Read More