#Srilanka

LatestNews

பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுகிறது! ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவித்தல்!!

தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எனினும், மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு வழமைபோன்று அமுலில் இருக்கும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை, 23ஆம் திகதி இரவு பத்து மணிக்கு அமுல்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடானது 25ஆம் திகதி அதிகாலை நான்கு மணிவரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மக்கள் ஒன்று கூடுதல் நிகழ்வுகளை நடத்துதல், விருந்துபசாரங்களை நடத்துவது உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள Read More

Read More
LatestNews

இதோ வெளிவருகிறது புதிய விசேட வர்த்தமானி!!

அரிசி, பால்மா உட்பட அத்தியாவசிய பொருட்களை தொகையாக மறைத்து வைத்திருப்பதை தடைசெய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என வரத்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு எதிர்கொண்டு அசாதாரண நிலைமையில் மக்களுக்கு சாதாரண விலையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. அதற்காக அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்பவர்களும் நுகர்வோரும் பாதிக்காதவகையில் சாதாரண விலையில் பொருட்களை விற்பனை செய்யவும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். Read More

Read More
LatestNews

முதலாம் ஆண்டிலிருந்து ஆங்கிலக் கல்வி முறையா? எதிர்க்கும் அமைச்சர் பந்துல!!

இலங்கை பிள்ளைகளுக்கு முதலாம் ஆண்டில் இருந்து ஆங்கில மூலம் கல்வியை வழங்கும் யோசனையை எதிர்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், இது அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடாக இருக்கலாம் என நான் நினைக்கின்றேன். முன்னாள் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் என்ற வகையில் இலங்கை பிள்ளைகளுக்கு முதலாம் ஆண்டு முதல் ஆங்கில மொழியில் கல்வி கற்றுக்கொடுப்பதை தெளிவாக எதிர்க்கின்றேன். யுனிசெப் Read More

Read More
LatestNews

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – காரணம் கண்டுபிடிப்பு!!

இலங்கையில் அண்மைய சில நாட்களாக கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது. எனவே கொவிட் உயிரிழப்புக்கள் அதிகளவில் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என கருதக்கூடிய விடயங்களை சுகாதார அமைச்சின் நிபுணர் குழு அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். குறிப்பாக கொவிட் தொற்றாளர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்வதில் ஏற்படும் தாமதம் மற்றும் நோயாளர்களுக்கு தேவையான சிகிச்சைகளை பெறுவதற்கு காணப்படுகின்ற சந்தர்ப்பங்கள் போதுமானதாக Read More

Read More
indiaLatestNews

சீனாவின் கனவுத் திட்டம் – கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீட்டரில் உருவாகும் ஆபத்து _என்கிறார் வைகோ!!

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் சீனாவின் கடற்படைத் தளம் உருவானால், அது இந்தியாவின் பூகோள நலனுக்கு எதிராகப் போய்விடும் நிலைமை ஏற்படும் என்பதை இந்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ எச்சரித்துள்ளார். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சீனாவின் பிடியில் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம் இருப்பது என்பது இந்தியாவின் பூகோள நலனுக்கு ஆபத்தானதாக Read More

Read More
LatestNews

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு வெளியானது முக்கிய அறிவிப்பு !!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்று 14 நாட்களை கடந்திருந்தாலும், விமான நிலைய பிசிஆர் பரிசோதனை முடிவு வெளியாகும் வரை தனிமைப்படுத்தலில் ஈடுபடுவது அவசியம் என ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் மீண்டும் தொற்று ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும், இதனாலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சுகாதார அமைச்சின், தனிமைப்படுத்தல் பிரிவின், விசேட சமுக வைத்திய நிபுணர் டில்ஹானி சமரசேகர தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் Read More

Read More
LatestNews

பயணத்தடை தளர்வின் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ள சேவை – சுகாதார நடைமுறைகளில் கடும் இறுக்கம்!!

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் எதிர்வரும் வாரம் முதல் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் பொதுப் போக்குவரத்து சேவையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கடுமையான முறையில் செயற்படுத்தப்படுமென போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு தற்போது நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரம் முதல் பல அத்தியாவசிய சேவைகளை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய மீள ஆரம்பிக்க Read More

Read More
LatestNews

ஜூன் மாதம் முழுவதும் ஊரடங்குச் சட்டம்! கோட்டாபய தலைமையில் ஆராய்வு!!!!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளபயணத்தடை காரணமாக கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் எதிர்பார்த்த எதுவும் நடக்காத நிலையில், ஜூன் மாதம் முழுவது பூரணமான ஊரடங்குச சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் குறித்த அராய்வு மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் 11ஆம் திகதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.

Read More
LatestNews

பாடசாலைகள் திறப்பது எப்போது? சற்றுமுன் வெளிவந்த தகவல் !!

நாட்டில் தற்போது காணப்படுகின்ற அசாதாரண நிலைமையினால், பாடசாலைகளை மீள ஆரம்பிக்கின்றமை குறித்து, இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துக கொண்டே செல்கின்றது. எனினும் இம்மாதம் 29ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கிய Read More

Read More
LatestNews

ஐம்பது லட்சம் பைசர் தடுப்பூசிகள் இறக்குமதி செய்தி திட்டம்! அரசாங்கம் அறிவிப்பு!!

ஐம்பது லட்சம் பைசர் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிற்குள் இந்த தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முதல் கட்டமாக மூன்று லட்சம் முதல் நான்கு லட்சம் பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூலை மாதம் கிடைக்கப் பெற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பைசர் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு ஆணைக்குழு கடந்த மாதம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் எதிர்வரும் இரண்டு மாதங்களில் 2 Read More

Read More