#Srilanka

LatestNewsTOP STORIES

தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையில் குறைந்த அழுத்த பகுதி!!

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்றது. இதனால் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, வடமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய Read More

Read More
LatestNews

யாழ் – கொழும்பு புகையிரத சேவை மீள ஆரம்பம்!!

யாழ் கொழும்பு புகையிரத சேவை எதிர்வரும் மூன்றாம் திகதி மாலை ஆரம்பமாக உள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார். முதலில் யாழில் இருந்து கொழும்பிற்கு ஒரு சேவையும் கொழும்பில் இருந்து யாழிற்கு ஒரு சேவையுமாக சாதாரண புகையிரத சேவை மாத்திரமே ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறினார். கல்கிசை காங்கேசன்துறைக் கிடையிலான புகையிரத சேவை எதிர்வரும், 3ஆம் திகதி மாலை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவித்தார். எதிர்வரும் மூன்றாம் திகதி மாலை ஐந்து முப்பது மணிக்கு கல்கிசையில் Read More

Read More
LatestNews

மின்னல் தாக்குதலில் ஆறு வயது சிறுவன் உயிரிழப்பு!!

புத்தளம் – ஆனமடுவ பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது  ஆனமடுவ, பாலியாகம பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவனே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் உயிரிழந்த குறித்த சிறுவன் தனது தாத்தாவுடன் வயலுக்குச் சென்றுள்ளார். இதன் போது குறித்த சிறுவன் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு உடனடியாக ஆனமடுவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள Read More

Read More
LatestNews

தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம்….. தொடர்ந்தும் மழை!!

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்றதால்  வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ Read More

Read More
LatestNews

இலங்கையில் தொடர்ந்தும் அதிகரித்து செல்லும் அரிசியின் விலை!!

காணப்படுவதாக புறக்கோட்டை சந்தையை மேற்கோள்காட்டிய செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரிய வருகையில், கடந்த காலங்களில் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதனையடுத்து அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டதோடு, அரிசி தட்டுப்பாடு காரணமாக அது நீக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்தும் அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்திருந்தது. இருப்பினும், சந்தையில் அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்கமைய, புறக்கோட்டை Read More

Read More
LatestNews

மின் பாவனையாளர்களுக்கு முக்கிய தகவல்….. அமைச்சர் காமினி லொக்குகே!!

பல மாதங்களாக மின்சாரக் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு சிவப்பு பட்டியல் அனுப்பப்பட்ட போதிலும், தொடர்ந்தும் கட்டணத்தைச் செலுத்த தவறியவர்களின்  மின்சார விநியோகத்தை துண்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே (Gamini Lokuge) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கொரோனாத் தாக்கம் காரணமாக ஏற்படும் வருவாய் இழப்பைக் கருத்தில் கொண்டு மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கு சில நிவாரணங்களை வழங்க அரசாங்கம் முடிவு Read More

Read More
LatestNews

சீனி விலை அதிகரிப்பை தடுக்க, இறக்குமதியாளர்களால் வழங்கப்பட் ஆலோசனை!!

சீனி விலையை கட்டுப்படுத்த இறக்குமதியாளர்கள் தீர்வொன்றை தெரிவித்துள்ளனர். இதன்படி சீனியை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர் தொகையை வங்கிகளுக்கு வழங்குமாறு சீனி இறக்குமதியாளர்கள் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிடம்(Lasantha Alagiyawanna) கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் சீனி இறக்குமதியை முறைப்படுத்தி கட்டுப்பாட்டு விலையில் வழங்க முடியும் என சீனி இறக்குமதியாளர் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் நேற்று (27) பிற்பகல் அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளது. சீனிக்கு Read More

Read More
LatestNews

கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை…… அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் வானிலை பாதிப்பு!!

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்குமற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் Read More

Read More
LatestNews

அரச மருத்துவ அதிகாரிகள் பாடசாலை சிற்றுண்டிச்சாலை தொடர்பில் வெளிவந்த சுற்றறிக்கை!!

பாடசாலை சிற்றுண்டிச்சாலை எவ்வாறு அமைய வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை அடுத்து சிறுவர்களிடையே தொற்றா நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதாக அறிவித்துள்ளது. எனினும், பல சிற்றுண்டிச்சாலைகள் அந்த சுற்றறிக்கைக்கு அமைய செயற்படுவதில்லையென வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது , மாணவர்களின் இணை பாடவிதான Read More

Read More
LatestNews

கொழும்பு துறைமுகத்தில் தரையிறங்கிய 400 சொகுசு வாகனங்கள்!!

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ள போதிலும் சுமார் 400 சொகுசு வாகனங்கள் கொழும்பு துறைமுகத்தில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தரையிறங்கிய குறித்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுமா இல்லையா என இலங்கை சுங்க திணைக்களம் நிதி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்த நிலையில் இந்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் தற்போது அந்த வாகனங்கள் சட்டத்திற்கு முரணாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் தனது Read More

Read More