#Srilanka

LatestNews

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

கொழும்பு துறைமுக நகரம் இலங்கையில் ஒரு தனி நாடு போன்ற ஒரு பகுதி என்றும், அதற்கான நிதி சக்தி கூட நாடாளுமன்றத்திற்கு இல்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (10) அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாடாளுமன்றம் நிறைவேற்றிய 25 சட்டமூலங்கள் கூட துறைமுக நகரத்தில் செல்லாது என்று அவர் கூறினார். அதன்படி, இது ஒரு தனி நாடு, ஆகும். இலங்கை மத்திய Read More

Read More
LatestNews

மூர்க்கமாகத் தாக்கி வீதியில் தூக்கி வீசப்பட்ட யாழ் இளைஞன்!

யாழ்ப்பாணத்தில் கடற்கரை ஓய்வுக் கொட்டகையில் படுத்துறங்கிய இளைஞனை இரும்புக் கம்பியினால் கொடூரமாக அடித்து வீதியால் இழுத்துச் சென்று வீசிய கொடூர சம்பம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் நேற்று மாலை இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுப்பர்மடத்தைச் சேர்நத 22 வயதுடைய ஜெகதீசன் றீகன் என்ற இளைஞனே மிக மோசமான அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். முன் பகையின் காரணமாகவே இந்த கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read More

Read More
CINEMALatestNews

மேடையில் பறிக்கப்பட்ட கிரீடம் மீண்டும் புஷ்பிகாவுக்கே சென்றது – திடீர் திருப்பம்

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இலங்கைக்கான திருமதி அழகி போட்டியில் கிரீடம் பறிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வாவுக்கு நேற்று மீண்டும் கிரீடம் வழங்கப்பட்டுள்ளது. அன்று நடந்த சம்பவம் குறித்து வருந்துவதாகவும், புஷ்பிகா டி சில்வாவிடம் மன்னிப்பு கோரியதாகவும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். ஷங்கரில்லா ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த இலங்கையின் திருமதி அழகியான புஷ்பிகா டி சில்வா, எனக்கு நடந்த சம்பவத்திற்காக நான் துவண்டு போய், விழ மாட்டேன். Read More

Read More
LatestNews

மீண்டும் இலங்கைக்கு ஆபத்தா? ஜயநாத் கொலம்பகே பதில்

சர்வதேசத்திற்கு நாம் அளித்த உறுதிமொழிகளை தொடரப்போகிறோம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். அண்மையில் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் போர்க்குற்ற விசாரணை மீதான தீர்மானம் நிறைவேறியது. நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு குறித்து ரிம் செபஸ்டியன் வினவிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போது அவர் இதனை தெரிவித்தார். காணொளி வாயிலாக இடம்பெற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தெரிவித்த விடயங்கள் Read More

Read More
LatestNews

இரவு வேளை வீட்டிற்குள் நுழைந்த மர்மக் கும்பலின் அராஜகம்!

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த மர்மக் குழுவினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியதுடன், தளபாடங்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரவு 7.30 மணியளவிலேயே மர்மக் கும்பல் வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்து அட்டகாசம் செய்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மர்மக் குழுவினர் தாக்குதல் மேற்கொண்ட வீட்டுவளாகத்தில் வாடகைக்கு வசித்துவரும் இளைஞரையும், யுவதியையும் தேடியதுடன், அவர்களை காணாத நிலையில் வீட்டின் உரிமையாளர்களை அச்சுறுத்தி, வீட்டு Read More

Read More
LatestNews

யாழில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்! பொலிஸ் அதிகாரியின் விரலைக் கடித்த இளைஞன்

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் பொலிஸாரின் கை விரலை கடித்ததாக தெரிவித்து யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில். யாழ்.ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாகவிகாரையில் இரவுக் கடமையிலிருந்த பொலிஸாருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞனுக்கும் இடையில் இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது . வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் பொலிஸாரின் கை விரலை குறித்த இளைஞன் கடித்துள்ளார். காயத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரி யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், விரலை கடித்த இளைஞரை பொலிஸார் கைது Read More

Read More
LatestNews

யாழில் பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்!

யாழ்ப்பாணம் – புலோலி உபயகதிர்காமம் பகுதியில் குடி தண்ணீர் எடுப்பதற்கு சென்ற பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். நேற்று முற்பகல் இடம்பெற்ற இச் சம்பவத்தில் முறாவில், புலோலி தெற்கைச் சேர்ந்த 60 வயதான முருகமூர்த்தி யோகேஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்து குடி தண்ணீர் எடுப்பதற்காக சென்ற அவர் குடிதண்ணீர் எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் வீதியில் மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட Read More

Read More
LatestNewsTOP STORIES

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது பயணிகள் முனையத்தை தாமரை இலைகளாக மாற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த தாமரை இலையை மறுவடிவமைக்க சுமார் ரூ .35 மில்லியன் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இவ்விடத்தில் தாமரை இலை வடிவமே இருந்தது. எனினும் நல்லாட்சி அரசாங்கம் இதை அலரி இலை வடிவத்திற்கு மாற்றியது.   இந்த பயணிகள் முனையம் முன்னதாக தாமரை இலையின் வடிவத்தில் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அலரி இலையின் வடிவத்திற்கு மாற்றியதன் Read More

Read More
LatestNews

இலங்கையில் கொரோனாவினால் 18 மாத குழந்தை உட்பட ஏழு பேர் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி 7பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்வடைந்துள்ளதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி கராபிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் மூளையில் ரத்தம் கசிதல் ஆகிய காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு – 15 பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதான பெண் ஒருவர் Read More

Read More
LatestNews

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இதன்படி கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த நாட்டின் ஏனைய மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    

Read More