#Sri lnaka

FEATUREDLatestNewsTOP STORIES

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு….. மீண்டும் அதிகரிக்கும் நிலையில் எரிபொருள் விலை !!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றைய நிலைவரப்படி ஒரு பரல் கச்சா எண்ணெய் விலை 124 டொலர்களை தாண்டியது. கடந்த ஒரு மாதமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், உள்நாட்டு சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. எவ்வாறாயினும், உலக சந்தையின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப உள்நாட்டுச் சந்தையிலும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என துறைக்குப் பொறுப்பான அமைச்சு அறிவித்துள்ளதால் இந்த மாதம் மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இலத்திரனியல் சேவையாக மாற்றியமைக்கப்படவுள்ளது இலங்கையின் அரச சேவைகள்!!

இலங்கையின் அரச சேவையை இலத்திரனியல் சேவையாக மாற்றி அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் புதிய செயலாளராகப் பதவியேற்றுள்ள பிரியந்த மாயாதுன்னே இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடதாசி தாள் பாவனையை குறைக்கும் வகையில் அரசாங்கத்தின் சேவைகளை இலத்திரனியல் மயப்படுத்துவது அத்தியாவசியம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிபொருள் வளங்களை சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பில் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படுவதுடன், அத்தியாசியமில்லாத நாட்களில் அரச ஊழியர்கள் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினர் சார்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் முக்கிய நிபந்தனை!!

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு, உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் மகிந்த ஜயசிங்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் குறைந்தளவான கொடுப்பனவை ஏற்றுக்கொள்ள முடியாது. எரிபொருள் விலையேற்றம் பாரிய சுமையினை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வழங்குவதற்கு தீர்மானித்துள்ள கொடுப்பனவில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். அதேநேரம், Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நள்ளிரவிலிருந்து அதிகரிக்கப்பட்டது பஸ் கட்டணம்!!

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளின் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. அரச மற்றும் தனியார் பேருந்து கட்டணங்கள் 19.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 32 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது. பேருந்து கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சுன்னாகத்தில் எரிபொருளை விநியோகித்து விட்டுத்திரும்பிய எரிபொருள் தாங்கி, சாரதி மற்றும் உதவியாளர் மீதும் கொடூர தாக்குதல்!!!

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளை விநியோகித்து விட்டுத்திரும்பிய எரிபொருள் தாங்கி மீதும் சாரதி மற்றும் உதவியாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சனிக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் சந்தேகத்தில் 26 வயதான சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதான சகோதரர்கள் இருவரும் மதுபோதையில் இருந்துள்ளார்கள் என சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நிறுவப்பட்ட்து “ஆர்ப்பாட்ட செயலகம்”….. இலங்கையிலுள்ள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஆலோசனை அறிக்கையை இரு நாட்களில் வெளியிடவுள்ளோம்!!

அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 43 ஆவது நாளை எட்டியுள்ளதுடன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான பதாதைகள் அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரச தலைவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடலில் இளைஞர்களால் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் நேற்று இரவு போராட்டக்காரர்களால் “ஆர்ப்பாட்ட செயலகம்” திறந்து வைக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இலங்கை வரலாற்றில் நீண்ட நாட்கள் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

“தமிழர் இனப்படுகொலை நினைவு தினமாக” கனேடிய நாடாளுமன்றில் ‘மே 18’ அங்கீகரிப்பு!!

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மே 18ஆம் திகதியை ‘தமிழர் இனப்படுகொலை நினைவு தினமாக’ அங்கீகரித்ததற்கு இலங்கை அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், கனேடிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டிற்கு முரணான அதாவது இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாகக் கண்டறியவில்லை. புலிகளின் பயங்கரவாதத்தை தோற்கடிக்க நடாத்தப்பட்ட மோதலின் இறுதிக் கட்டத்தில் இலங்கையின் உண்மையான நிலைமை குறித்து கனேடிய அரசாங்கத்திற்கு மிக உயர்ந்த மட்டத்தில் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் முக்கிய அறிவிப்பு!!

ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று(17/05/2022) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கி வருகை தருவது கட்டாயமானதாகும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதற்காக, www.immigration.gov.lk எனும் இணையத்தளத்தினூடாகவோ அல்லது 070 7101060 எனும் தொலைபேசி இலக்கத்தையோ பயன்படுத்துமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதாயின், அரச கடமை நாட்களில் காலை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மகிந்த உட்பட 13 பேருக்கு பயணத்தடை விதித்தது கோட்டை நீதவான் நீதிமன்று!!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல்வாதிகள் மற்றும் விசுவாசிகளான பதின்மூன்று (13) பேருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, சி.பி.ரத்நாயக்க, சனத் நிஷாந்த மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன உள்ளிட்டோருக்கு இந்த பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னa கோனுக்கும் பயணத் தடை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கடலில் மூழ்கிய பாடசாலை மாணவர்கள் மூவர்….. இருவர் மாயம் ஒருவர் தீவிர சிகிச்சையில்!!

3 பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏனைய இருவரின் நிலை தொடர்பாக எதுவும் தெரியவரவில்லை. இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை(10) மாலை 5.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. சுமார் 17 முதல் 18 வயது வரை மதிக்கத்தக்க அங்குள்ள பிரபல பாடசாலை மாணவர்களே இவ்வாறு அனர்த்தத்தில் சிக்கிக்கொண்டதுடன் கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் அதனையும் பொருட்படுத்தாது Read More

Read More