#School

LatestNews

கொரோனா அச்சம்: பாடசாலைகள் மூடப்படும்? வைத்திய அதிகாரி வெளியிட்ட தகவல்

கொரோனா தொற்று ஆபத்து காரணமாகப் பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார். பாடசாலைகளைத் தொடர்ந்தும் நடத்த அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க பெற்றோர், சுகாதாரப் பிரிவு மற்றும் கல்வி அதிகாரிகள் ஆகிய மூன்று Read More

Read More
LatestNews

நாளை முதல் மேலும் சில பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றது!

தம்புள்ள கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த பாடசாலைகளை நாளை (30) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் அதிகரித்து வருவதனால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெரும்பாலானோருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவுகள் வெளியானதிலேயே வர்த்தகர்கள் மூவருக்கு கொரோனா Read More

Read More
LatestNews

நாளை பாடசாலைகள் ஆரம்பம் – கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவுறுத்தல்

கொரோனாவை கட்டுப்படுத்தும் செயலணி மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். அத்துடன், தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினைக் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது பாடசாலைகளை ஆரம்பிக்க முடியுமா Read More

Read More
LatestNews

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இதன்படி கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த நாட்டின் ஏனைய மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    

Read More
LatestNews

பாடசாலைகளைத் திறக்கத் திட்டம்: இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டின் சில இடங்களைத் தவிர்த்து ஏனைய பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளைத் தவிர நாட்டின் ஏனைய பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது. குறித்த பாடசாலைகள் தரம் 6 முதல் 13ஆம் வகுப்பு மாணவர்களின் 3 ஆம் தவணை கற்றல் செயற்பாடுகளுக்காக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய மாணவர்கள் செயற்பட Read More

Read More
LatestNews

பாடசாலைகளை மீண்டும் தொடங்க தீர்மானம்! திகதி அறிவிக்கப்பட்டது – கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

பாடசாலைகளை மீண்டும் 23ஆம் திகதி திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய இடங்களில் பாடசாலைகளை வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, 6ஆம் ஆண்டு தொடக்கம் 13 ஆம் ஆண்டு வரையான வகுப்புக்களே இடம்பெறும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.    

Read More
LatestNews

பாடசாலைகள் மீள ஆரம்பம் – கல்வியமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 6ம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More