#School

LatestNews

பாடசாலைகள் மீண்டும் எப்போது திறக்கப்படும்? கல்வி அமைச்சர் பதில்!!!!

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதால் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான உறுதியான திகதியை கூற முடியாது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, இணையத்தின் மூலமான கல்வியை மேலும் சிறிது காலம் தொடர வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் இதை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், கொரோனா தொற்றுநோய் காரணமாக, பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. Read More

Read More
LatestNews

பாடசாலைகள் திறப்பது எப்போது? சற்றுமுன் வெளிவந்த தகவல் !!

நாட்டில் தற்போது காணப்படுகின்ற அசாதாரண நிலைமையினால், பாடசாலைகளை மீள ஆரம்பிக்கின்றமை குறித்து, இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துக கொண்டே செல்கின்றது. எனினும் இம்மாதம் 29ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கிய Read More

Read More
LatestNews

கல்விச் செயற்பாடுகள் ஆரம்பம்? கல்வியமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பு!!

நாட்டில் அதிகரித்துள்ள கொரோனான தொற்று காரணமாக பாடசாலைச் செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் 4 கட்டங்களாக பாடசாலைகளில் கல்விச் செயற்பாடு ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் தகவல் பொய்யானது என கல்வியமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். தற்போது அதிகரித்துள்ள கொரோனா பரவல் நிலைமைக்கு மத்தியில், பாடசாலைகளை மீள திறப்பது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNewsWordPressWorld

கனடாவில் அதிர்ச்சி சம்பவம்! பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள்!!

கனடாவில் கம்லூப்ஸ் என்ற இடத்தில் பூர்வ குடிமக்கள் பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளி 1890-ம் ஆண்டு முதல் 1969-ம் ஆண்டுவரை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அரசு அந்த பள்ளியை பொறுப்பில் எடுத்தது. அதன்பின் 1978-ல் இந்த பள்ளி மூடப்பட்டது. ஆரம்பத்தில் பள்ளியை நடத்தியபோது பழங்குடி மக்களின் குழந்தைகள் கொல்லப்பட்டோ அல்லது வேறு வகையிலோ உயிரிழந்திருக்கவோ வேண்டும் என்று கருதப்படுகிறது. அவர்களது உடல்களை பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் புதைத்துள்ளனர். எனினும், ரேடார் உதவியுடன் அந்த Read More

Read More
LatestNews

நாளை ஆரம்பிக்கப்படும் மேல்மாகாண பாடசாலைகள்!

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்று நிரூபத்திற்கமைய சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுடன் நாளை மேல் மாகாணத்தில் சகல வகுப்பு மாணவர்களுக்குமான கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. மேல் மாகாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்பட்டமையினால் கடந்த வாரம் 5 , 11 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாத்திரம் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஏனைய சகல மாகாணங்களிலும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பமாகின. மேல் மாகாணத்தில் ஏனைய வகுப்புக்களுக்கு முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் Read More

Read More
LatestNews

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் வெளிவந்த புதிய செய்தி

மேல் மாகாணத்தில் மார்ச் 15ஆம் திகதி முதல் மீண்டும் பாடசாலைகளை திறக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கல்வி அமைச்சு அனுமதி கோரியுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறுகையில், தரம் – 5, தரம் – 11, மற்றும் தரம் – 13ஐ முதற்கட்டமாகவும், ஏனைய வகுப்புக்களை கட்டம் கட்டமாக திறக்கவும் கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என அவர் கூறினார். பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கள் வழங்கிய அறிவுறுத்தல்களை கவனத்தில் Read More

Read More
LatestNews

6 பாடசாலைகள் திறக்கப்படமாட்டாது! வெளியான அறிவிப்பு

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் நாளை 06 பாடசாலைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வவுனியா தமிழ் மகா வித்தியாலயம், காமினி தேசிய பாடசாலை, தமிழ் கத்தோலிக்கக் கலவன் பாடசாலை, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, சைவப்பிரகாசம் மற்றும் முஸ்லிம் மகா வித்தியாலயம் இவ்வாறு மூடப்படுகின்றதாக வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன தெரிவித்தார். இந்த பாடசாலைகளை மீள திறக்கின்ற திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார். இதேவேளை அம்பாறை நகரிலுள்ள பாடசாலைகள் Read More

Read More
LatestNews

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் – கல்வி அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனையின் பேரில் தயாரிக்கப்பட்ட விரிவான திட்டத்தின் படி ஒவ்வொரு பாடசாலைக்கும் மாணவர்களின் சுகாதாரத்தை கண்காணிப்பதற்கு அதிகாரியாக ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஹோட்டலில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகளின் சுகாதார செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் முறையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், ஆரம்பிக்கப்படவுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் Read More

Read More
LatestNews

வடக்கில் மூடப்பட்ட பாடசாலைகளுக்கு விடுதலை

வட மாகாணத்தில் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மற்றும் காரைநகர் இந்துக் கல்லூரி என்பன எதிர்வரும் 7ஆம் திகதி, திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதற்கான அறிவிப்பை மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளார்.  

Read More
LatestNews

பரீட்சைக்கான புதிய திகதி எப்போது? கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதமளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலையடுத்து தீர்மானிக்கப்பட்ட திகதியில் சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கு முடியாது என கல்வி அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், பரீட்சைக்கான புதிய திகதியை அறிவிப்பதாகவும் அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். மேலும் Read More

Read More