வடக்கில் மூடப்பட்ட பாடசாலைகளுக்கு விடுதலை
வட மாகாணத்தில் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மற்றும் காரைநகர் இந்துக் கல்லூரி என்பன எதிர்வரும் 7ஆம் திகதி, திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதற்கான அறிவிப்பை மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளார்.