ஜேர்மனியில் மாணவர்களுடன் சென்ற ரயில் தடம் புரண்டது!!

ஜேர்மனியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.   ஜேர்மனியின் முனிச் நகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் கார்மிஷ்-பார்டென்கிர்சென் என்ற பவேரியன் ஸ்கை ரிசார்ட்டின் வடக்குப் பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது ரயிலில் பாடசாலை மாணவர்கள் உட்பட 60 பயணிகள் நிரம்பி இருந்ததாகவும் இதில் 4 பேர் வரை உயிரிழந்ததுடன் 30 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Read More

Read more

மிருசுவிலில் ரயிலுடன் மோதுண்டது பட்டா ரக வாகனம்….. 12  வயது சிறுவன் மரணம் – இருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற ரயில் – பட்டா ரக வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் ஜனுசன்  12  வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் தந்தையான நாகமணி தயாபரன் வயது 45 மற்றும் உயிரிழந்தவரின் சகோதரனான தயாபரன் தனுஷன் வயது 15 ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More

Read more

புகையிரதத்தில் மோதுண்டது முச்சக்கரவண்டி….. ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!!

வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் மோதுண்ட முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பலியாகி உள்ளனர். இந்த விபத்து இன்று முற்பகல் 10.45 மணியளவில் அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் மற்றும் மருமகள் ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். இவர்கள் காலியை பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காலி – பூஸா வெல்லப்பட பகுதி ரயில் கடவையூடாக கடந்த முச்சக்கர வண்டியை ரயில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. ஒருவர் Read More

Read more

தனியார் மயமாகும் புகையிரத சேவை…… புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு!!

தற்போதைய அரசாங்கம் நாட்டிலுள்ள புகையிரத சேவையை தனியார் மயமாக்குவதற்கு தீர்மானித்துள்ளது என புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு எதிராகத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இன்றைய கலந்துரையாடலின் பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கப்படும் எனவும் புகையிரத தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Read more

இடைநிறுத்தப்பட்டது எட்டு ரயில் சேவைகள்!!

மண்சரிவு எச்சரிக்கை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ரயில் தண்டவாளத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதால், கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையிலான எட்டு ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மோசமான வானிலைக்கு மத்தியிலும் ஊழியர்கள் தற்போது பாதையை புனரமைக்க முயற்சித்து வருவதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் கசுன் சாமர தெரிவித்தார்.

Read more

நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், மாகாணங்களுக்கிடையிலானா போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகள் இரு வாரங்களுக்கு இல்லை!!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்த நிலையில் , பொது போக்குவரத்து தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்துக்கள் எதிர்வரும் சில வாரங்களுக்கு இடம்பெற மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம  (Dilum Amunugama )தெரிவித்துள்ளார். எனினும் , பேருந்து சேவைகளை மாகாணங்களுக்கு இடையில் முன்னெடுக்க தீர்மானம் அவர் தெரிவித்தார். இதன்படி, தனியார் மற்றும் அரச Read More

Read more

மலேசியாவில் நடந்த முதல் கோர விபத்து! 200இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்!!

##மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 200இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டு மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று உள்ளூர் நேரம் இரவு 8:45 மணிக்கு இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,   ஒரே ஒரு ரயில் கட்டுப்பாட்டாளருடன் சோதனை ஓட்டத்தில் சென்று கொண்டிருந்த ஒரு ரயில், பயணிகளை ஏற்றிச் செல்லும் மற்றொரு ரயிலில் மோதியது. பிரசாரனா மலேசியா பெர்ஹாடடால் இயக்கப்படும் இரு ரயில்களும் கம்புங் பாரு மற்றும் கே.எல்.சி.சி நிலையங்களுக்கு Read More

Read more

உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்ட 20 ரயில் சேவைகள்!

நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள காரணத்தினால் இரவு அஞ்சல் ரயில் உட்பட 20 ரயில் சேவைகள் இன்று முதல் ரத்து செய்யப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்ற நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டினை மோசமான நிலைக்கு கொண்டு செல்லமால் மக்களைப் பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் குறைந்தது ஒருவார காலமாவது நாட்டை முடக்க வேண்டும் என Read More

Read more