அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் புகையிரத அதிபர்கள் சங்கம்!!

புகையிரத அதிபர்கள் சங்கம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் , இந்த பணிப்பகிஷ்கரிப்பு  இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகக சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். புகையிரத பயண கால அட்டவணையை நடைமுறைப்படுத்தாமை, தொடருந்து ஊழியர்களை முறையாக நிர்வாகம் செய்ய தவறியமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. புகையிரத அதிபர்கள் தொடர்பான அனைத்துப் பணிகளில் இருந்தும் விலகுவதற்கு தொடருந்து நிலைய நிர்வாகக் குழு தீர்மானத்துள்ளது. தூர சேவை புகையிரதங்களை உரிய வகையில் இயக்க அதிகாரிகள் Read More

Read more

தனியார் மயமாகும் புகையிரத சேவை…… புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு!!

தற்போதைய அரசாங்கம் நாட்டிலுள்ள புகையிரத சேவையை தனியார் மயமாக்குவதற்கு தீர்மானித்துள்ளது என புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு எதிராகத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இன்றைய கலந்துரையாடலின் பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கப்படும் எனவும் புகையிரத தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Read more