அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் புகையிரத அதிபர்கள் சங்கம்!!
புகையிரத அதிபர்கள் சங்கம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ,
இந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகக சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
புகையிரத பயண கால அட்டவணையை நடைமுறைப்படுத்தாமை, தொடருந்து ஊழியர்களை முறையாக நிர்வாகம் செய்ய தவறியமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
புகையிரத அதிபர்கள் தொடர்பான அனைத்துப் பணிகளில் இருந்தும் விலகுவதற்கு தொடருந்து நிலைய நிர்வாகக் குழு தீர்மானத்துள்ளது.
தூர சேவை புகையிரதங்களை உரிய வகையில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளமையால் எதிர்வரும் நாட்களுக்கான ஆசன முன்பதிவுகள் நேற்று முதல் இடம்பெறமாட்டாது என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.