மூலதனச் செலவினங்களை கணிசமாகக் குறைக்கும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டம்….. பிரதமர் ரணில்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வர்த்தக சபைகள், திறைசேரி மற்றும் பொருளாதார ஆலோசகர்களின் பிரதிநிதிகளை சந்தித்து புதிய வரவு செலவு திட்டம் மற்றும் எதிர்கால பொருளாதார திட்டங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, ​​மூலதனச் செலவினங்களை கணிசமாகக் குறைக்கும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைன் யுத்தத்துடன், உள்ளூர் சந்தையின் தவறான நிர்வாகத்தினால் உணவுப் பற்றாக்குறையை நாடு எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் மேலும் விளக்கமளித்துள்ளார். இந்த Read More

Read more

இன்று மாலை புதிய பிரதமராக ரணில் பதவிப் பிரமாணம்….. பிரபல சிங்கள ஊடகம் தகவல்!!

புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இந்த வாரத்திற்குள் அமைக்கப்படும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என பிரபல சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கமைய, இன்று மாலை புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் தொடர்பில் தற்போது இறுதிக்கட்ட கலந்துரையாடல் இடம்பெற்று Read More

Read more