#Police

LatestNews

உடுப்பிட்டியில் இரு பகுதியினருக்கிடையே மோதல்…. குவிக்கப்பட்டுள்ள இராணுவம்!!

யாழ். உடுப்பிட்டியில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதையடுத்து பொலிஸாரால் கோரப்பட்டதற்கு அமைய இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி இலகடி மற்றும் வன்னிச்சி அம்மன் கோவில் வேலிந்ந தோட்டம் பகுதியைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே இடம்பெற்று வந்த மோதல் கடந்த சில நாட்களாக ஊர்ப் பிரச்சினையாக மாறியது. இந்த மோதலில் சிலர் தலைமறைவாகிய நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரின் அழைப்பின் பேரில் இன்றிரவு இராணுவத்தினர் சுற்றிவளைத்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர். அதனால் அந்தக் கிராமத்தில் Read More

Read More
LatestNews

27 ஆம் திகதி கடத்தப்பட்ட பெண் வீதியோரத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு!!

அம்பாறையில் கை, கால்கள் கட்டப்பட்டு வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்ட பெண் சிகிச்சைகளுக்காக அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 27 ஆம் திகதி தனது மகள் கடத்தப்பட்டதாக, குறித்த பெண்ணின் தாய், வென்னப்புவ கந்தானகெதர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையிலேயே அம்பாறை தமன, சீனவத்த பிரதேசத்திலுள்ள வீதியொன்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர Read More

Read More
LatestNews

அச்சுவேலி வடக்கில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வு….. சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக வழக்குத் தாக்கல்!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி வடக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த விருந்தினர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டு மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கொவிட்-19 தொற்று பரிசோதனையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “அச்சுவேலி வடக்கில் இன்று திருமண நிகழ்வு இடம்பெற்றது. மணமகன் மிருசுவிலைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றிருப்பதாக இராணுவத்தினருக்குத் தகவல் கிடைத்தது. நிகழ்வு இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று விருந்தினர்களை அங்கிருந்து செல்ல பணிக்கப்பட்டது. அத்துடன், Read More

Read More
LatestNews

கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாத நெல் ஆலைகளை சுற்றிவளைத்து கைப்பற்றுங்கள்…. கோத்தபாய ராஜபக்ச!!

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாத நெல் ஆலை உரிமையாளர்களின் களஞ்சியசாலைகளை சுற்றிவளைத்து கைப்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அவசரகால விதிமுறைகளின் கீழ், அவ்வாறு கைப்பற்றியவற்றை கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் அரிசி நெருக்கடி பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு எழுப்பப்பட்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்ட ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அரசாங்கம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை Read More

Read More
LatestNews

ஊரடங்குச் நேரத்தில் கைப்பற்றப்பட்ட 70, 000 ஆயிரம் மில்லி வீற்றர் கசிப்பு!!

ஊரடங்குச் சட்ட நேரத்தில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக மட்டக்களப்பு மறைத்து வைக்கப்பட்டிருந்த 70, 000 ஆயிரம் மில்லி வீற்றர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளதுடன் இரு தோணிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என  மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்துள்ளார். அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடையவ இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் மட்டக்களப்பு – முறக்கொட்டான்சேனை வாவி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரையின் பேரில் Read More

Read More
LatestNews

மின்சார வேலியில் சிக்கிய யானை உயிரிழப்பு!!

தனமல்வில பகுதியில் மின்சார வேலியில் சிக்கி யானையொன்று உயிரிழந்துள்ளமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனமல்வில பொலிஸ் பிரிவில் கவவெல்கல பாதுகாக்கப்பட்ட வலயத்துக்குள் காணப்படும் வாவி ஒன்றுக்கருகில் இந்த யானைகுட்டி இறந்து கிடந்துள்ளது. இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கமைய 18 வயது யானை ஒன்றே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய கல்கொட்டுகந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் பொலிஸார் இணைந்து நடத்திய விசாரணைகளின் போதே இச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட Read More

Read More
LatestNews

புதையல் தோண்டியவர்கள் – பெண் உட்பட நால்வர் கைது!!

புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட 4 பேர் அம்பன்பொல நெலும்பத்வெவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பன்பொல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டது. சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்கள், கைப்பேசிகள் 06 ம் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அம்பன்பொல, பலல்ல, புத்தளம் மற்றும் நிகவரடிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் Read More

Read More
LatestNews

தலையில்லாமல் ஆணின் சடலம் மீட்பு!!

காலி சமுத்திர மாவத்தைக்கு அருகில் தலையற்ற நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 30 தொடக்கம் 40 வயது மதிக்கத்தக்கதாக இந்த சடலம் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலத்தை அடையாளம் காண பொலிஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
LatestNews

அடுத்து சிக்கிய 250 கிலோ கிராம் ஹெரோயின்!!

பேருவளையை அண்மித்த கடற்பரப்பில் சுமார் 250 கோடி ரூபா பெறுமதியான 250 கிலோகிராம் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பணியகத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, கடற்படையினரின் உதவியுடன் இன்று அதிகாலை அதிரடி சுற்றிவளைப்பை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர். இதன்போதே,  குறித்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த போதைப்பொருளை படகு ஒன்றில் கொண்டுவந்த 5 சந்தேகநபர்களும்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
LatestNews

தென்னிலங்கையில் சிக்கிய பெருமாளவான ஹெரோயின் போதைப்பொருள்!!

தென் மாகாணத்தை அண்மித்த கடற்பரப்பில், 290 கிலோகிராமிற்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருளுடன், 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுள்ளனர். படகொன்றில் கொண்டு சென்ற சந்தர்ப்பத்திலேயே, இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், அரச புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய, கடற்படையுடன் இணைந்து பொலிஸ் போதைப்பொருள் பிரிவு நடத்திய சுற்றி வளைப்பினை மேற்கொண்டுள்ளனர். இதன் போது குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 2321 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் தொகையே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் Read More

Read More