அடுத்து சிக்கிய 250 கிலோ கிராம் ஹெரோயின்!!
பேருவளையை அண்மித்த கடற்பரப்பில் சுமார் 250 கோடி ரூபா பெறுமதியான 250 கிலோகிராம் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பணியகத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, கடற்படையினரின் உதவியுடன் இன்று அதிகாலை அதிரடி சுற்றிவளைப்பை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.
இதன்போதே, குறித்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த போதைப்பொருளை படகு ஒன்றில் கொண்டுவந்த 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.