மின்சார வேலியில் சிக்கிய யானை உயிரிழப்பு!!
தனமல்வில பகுதியில் மின்சார வேலியில் சிக்கி யானையொன்று உயிரிழந்துள்ளமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனமல்வில பொலிஸ் பிரிவில் கவவெல்கல பாதுகாக்கப்பட்ட வலயத்துக்குள் காணப்படும் வாவி ஒன்றுக்கருகில் இந்த யானைகுட்டி இறந்து கிடந்துள்ளது.
இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கமைய 18 வயது யானை ஒன்றே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய கல்கொட்டுகந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் பொலிஸார் இணைந்து நடத்திய விசாரணைகளின் போதே இச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 61 வயதுடைய கலவெல்கல, சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.