#people

LatestNews

மலேசியாவில் நடந்த முதல் கோர விபத்து! 200இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்!!

##மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 200இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டு மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று உள்ளூர் நேரம் இரவு 8:45 மணிக்கு இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,   ஒரே ஒரு ரயில் கட்டுப்பாட்டாளருடன் சோதனை ஓட்டத்தில் சென்று கொண்டிருந்த ஒரு ரயில், பயணிகளை ஏற்றிச் செல்லும் மற்றொரு ரயிலில் மோதியது. பிரசாரனா மலேசியா பெர்ஹாடடால் இயக்கப்படும் இரு ரயில்களும் கம்புங் பாரு மற்றும் கே.எல்.சி.சி நிலையங்களுக்கு Read More

Read More
LatestNews

இலங்கைக்கு அருகில் “யாஸ் சூறாவளி” மையம்! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கைக்கு அருகில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள யாஸ் சூறாவளி மேலும் தீவிரமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. யாஸ் சூறாவளியானது எதிர்வரும் 26ஆம் திகதி வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் மேற்கு வங்காள கரையை கடக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே மறு அறிவித்தல் வரை நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் வங்காள விரிகுடாவின் கடற்பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

Read More
LatestNews

இலங்கைக்கு செல்ல வேண்டாம்! அமெரிக்க மக்களுக்கு அறிவிப்பு !!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா தமது பயணிகளை அறிவுறுத்தியுள்ளது. இலங்கைக்கான பயண எச்சரிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் புதுப்பித்துள்ளது.   அதில் தற்போதைய நிலையை கவனத்திற்கொண்டு 4 ஆம் மட்ட எச்சரிக்கை மட்டத்துக்குள் இலங்கையை அமெரிக்கா உள்ளடக்கியுள்ளது. இதேவேளை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையை ஆபத்தான நாடுகளின் பட்டியலில் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More
indiaLatestNews

நீங்கள் எந்தவகை குருதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள்? உங்களை தாக்குமா கொரோனா????

AB மற்றும் B இரத்த பிரிவு மாதிரி கொண்ட நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் எனவும் O இரத்த மாதிரி கொண்ட நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு எனவும் ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் தொழிநுட்ப மற்றும் விஞ்ஞான பிரிவு என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 10,000 பேரின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இரசாயன ஆய்வில் இந்த தகவல் வௌியாகியுள்ளது. Read More

Read More
LatestNews

மன்னாரில் மக்களின் நடமாட்டம் கட்டுப்பாட்டிற்குள்!!

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் கொரோன பரவல் காரணமாக அரசாங்கத்தினால் மாகாண ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், மன்னார் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் வர்த்தக நிலையங்கள் சிலவும் மூடப்பட்டுள்ளன. அதே நேரம் மக்கள் பொது போக்குவரத்துக்களை தவிர்த்துள்ளதுடன் அத்தியவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கு நகர் பகுதிக்கு வருவதையும் தவிர்த்துள்ளனர். அத்துடன் பொது மக்களின் சுகாதார நடைமுறைகளை அவதானிப்பதற்காகவும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை அவதானிப்பதற்கு எனவும் முப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Read More
LatestNews

கொரோனா சூழ்நிலையில் தபால் மா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் இன்று (13) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும் என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சில பகுதிகளில் கடிதங்கள் ஒன்று விட்ட ஒருநாள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார் அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அஞ்சல் அட்டைகளின் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.  

Read More
LatestNews

சாதாரணமாக நினைக்க வேண்டாம் – இலங்கைக்கென்று புதிய வைரஸ் உருவாகும்! கடுமையான எச்சரிக்கை!!

இலங்கையின் உண்மை நிலையை மறைப்பதால் செப்டெம்பர் மாதத்தில் ஐந்து இலட்சம் தொற்றாளர் இலங்கையில் அடையாளம் காணப்படலாம் எனவும், மரணங்கள் அதிகரிக்கலாம் எனவும் வொஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் உண்மைத்தன்மை அடங்கியுள்ளது. அந்த அறிக்கையை சாதாரணமாகக் கருதிவிட வேண்டாம் என்று மருந்துகள் மற்றும் சுகாதார நிர்வாகம் தொடர்பான வைத்திய நிபுணர் பேராசிரியர் சஞ்சய பெரேரா எச்சரித்துள்ளார். வொஷிங்டன் பல்கலைக்கழக கொரோனா உள்ளிட்ட தொற்றுநோய் ஆய்வுகள் குறித்த குழுவினர் உலகத்தில் கொரோனா வைரஸ் முதலாம் அலை உருவாகிய காலத்தில் இருந்தே Read More

Read More
LatestNews

மீண்டும் அமுலுக்கு வரும் அடையாள அட்டை பயணம்!!!!

நாளை முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அத்தியாவசியத் தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் படியே வெளியே செல்ல முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதற்கமைய தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமானது 1, 3, 5, 7, 9 எனும் ஒற்றை Read More

Read More
LatestNews

கொரோனாவின் கோரம்! தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள்!!!!

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து சபையின் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த சேவைகள் நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இந்த Read More

Read More
LatestNews

இன்று காலை 21 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டில் மேலும் 21 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான நடவடிக்கையை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எடுத்துள்ளார். இதற்கமைய, இரத்தினபுரி – ரக்வான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொலோ கந்த, ரம்புக, கத்லான, தனபெல, இம்புக்கந்த பொத்துபிட்டிய கிராம சேவகர் பிரிவுகள். இரத்தினபுரி – கலவான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனபொல, குடுபிட்டிய, குடாஹ, தெல்கொட கிழக்கு, தெல்கொட மேற்கு, தேவகலகம, தந்தகமுவ, கொஸ்வத்த, தபஸ்ஸர கந்த, வதுராவ, வெம்பிட்டியகொட, வெத்தாகல Read More

Read More