யாழில் இருந்து கதிர்காமம் நோக்கிய பயணம்….. குடைசாய்ந்த பேருந்து – ஆபத்தான நிலையில் 08 பேர்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற தனியார் பேருந்து இன்று(02/07/2023) அதிகாலை விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளதுடன் இளைஞர் ஒருவரின் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாரதியின் கவனக்குறைவு காரணமாக திருகோணமலை மொரவ பகுதியில் இந்த விபத்து அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மஹதிவுல்வெவ மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் பரதன்(வயது 33) என Read More

Read more

Whatsapp நிறுவனம் தனது பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதாக வரும் தகவலை நம்பி Pink Colour Whatsapp ஐ தொட்டீர்கள் என்றால் உங்கள் ஸ்மார்ட் போன் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் இப்போது குறி வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, Whatsapp செயலியை பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு அண்மையில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்த குறுஞ்செய்தியில் வரும் இணைப்பை (link) கிளிக் செய்தால் Whatsapp logo Pink நிறத்திற்கு மாறும் என்றும், Read More

Read more

மீண்டும் குறையும் எரிவாயு விலை….. லிட்ரோ நிறுவனத்திடமிருந்து அறிவிப்பு!!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை ஜூலை மாத தொடக்கத்தில் மீண்டும் குறைக்கப்படவுள்ளது. இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஜுன் மாதம் 04 ஆம் திகதி சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 452 ரூபாவால் குறைக்கப்பட்டு 3186 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. 5 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு 181 ரூபாவால் குறைக்கப்பட்டு 1281 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், Read More

Read more

நான்கு பெரிய வாகனங்கள் மோதி பாரிய விபத்து….. கவலைக்கிடமாகவுள்ளது 5 பேரின் நிலைமை!!

கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் இன்று (26/06/2023) காலை இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். புஸ்ஸல்லா பயிற்சி நிலையத்திற்கு அருகில் தனியார் பேருந்து வழுக்கிச் சென்று சொகுசு பேருந்துடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. சொகுசுப் பேருந்து முன்னோக்கி நகரந்தமையினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் வான் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

“ஜப்பான்” படத்தின் புதிய Update கொடுத்த நடிகர் கார்த்தி!!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்‘, ‘நம்மவீட்டு பிள்ளை‘ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, Read More

Read more

நாளுக்கு நாள் அதிபலத்துடன் முன்னேறும் உக்ரைன் படை….. ஒரே நாளில் 670 பேர் என மொத்தமாக 219 840 பேரைக் கொன்றொழித்து சாதனை!!

உக்ரைனின் படையினர் ஒரே நாளில் 12 ரஷ்ய தாங்கிகள் மற்றும் 22 பீரங்கி அமைப்புகளை அழித்ததாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூன் 16 – 17 அன்று நடந்த மோதலில் 670 ரஷ்ய படையெடுப்பாளர்களைக் கொன்றதுடன் அவர்களின் 12 தாங்கிகள் மற்றும் 23 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன்பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, 24 பெப்ரவரி 2022 மற்றும் 17 ஜூன் 2023 க்கு இடையில்  ரஷ்யப் படைகளின் மொத்த போர் இழப்புகள் வெளியாகி உள்ளன. Read More

Read more

12 வயதில் உயிரியல் மருத்துவ விஞ்ஞான துறையில் பல்கலைக்கழக பட்டமொன்றை பெறவுள்ள சிறுமி!!

கனடாவில் 12 வயது சிறுமியொருவர் பல்கலைக்கழக பட்டமொன்றை பெற்று சாதனை நிலைநாட்ட உள்ளார். கனடாவின் ஒட்டாவா பல்கலைக்கழத்தில்(University of Ottawa) உயிரியல் மருத்துவ விஞ்ஞான துறையில் இளநிலை பட்டம் பெற்றுக்கொள்ள உள்ளார். கனடிய வரலாற்றில் மிக இள வயதில் பல்கலைக்கழக பட்டம் பெற்றுக்கொண்டவர் என்ற சாதனையை அன்தியா கிரேஸ் பெட்ரிசியா டென்னிஸ்(Anthea Grace Patricia Dennis) என்ற குறித்த  சிறுமி பெற்றுக்கொள்ள உள்ளார். பெட்ரிசியா டென்னிஸ் தனது ஒன்பது வயதில் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டார் என தெரிவிக்கப்படுகின்றது. Read More

Read more

சடுதியாக குறைவடையவுள்ள எரிவாயு விலை….. வெளியாகிய அறிவிப்பு!!

12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபா அளவில் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (04) நள்ளிரவு முதல் குறித்த விலை திருத்தம் நடைமுறைப்படுத்தபடும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது 12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 3,638 ரூபா என்பது குறிப்பிடத்தக்ககது. மேலும் விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளைய தினம் விடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Read more

ஒரே பிரசவத்தில் ஐந்து பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!!

இந்தியாவின் ஜார்கண் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் அங்கிதா என்ற தாய். இப்படி ஒரே பிரசவத்தில் 5 குழந்தை பிறப்பது 6.5 கோடி மக்களில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும் அதிசய நிகழ்வு என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் சிறப்பு என்னவென்றால் அந்த 5 குழந்தைகளும் பெண் குழந்தைகள். ஜார்கண்ட் மாநிலத்தில் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் சத்ரா மாவட்டத்தை சேர்ந்த அங்கிதா என்ற பெண் அண்மையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More

Read more

முல்லைத்தீவிலும் 10 வயது சிறுமியை கடத்த முயற்சி….. மக்களால் முறியடிப்பு!!

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் இரு இளைஞர்கள் இணைந்து சிறுமி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தில் சந்தேக நபரான இளைஞரொருவரை மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று (13/05/2023) கைவேலிப் பகுதியில் 10 வயதுடைய பாடசாலை சிறுமி தனியார் வகுப்பிற்காக மோட்டார் சைக்கிளில்  தாயாரினால் அழைத்து வரப்பட்டு இறக்கிவிடப்பட்ட நிலையில், வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் சிறுமியினை அழைத்து கையினை பிடித்துக்கொண்டு முகத்தினை துணியால் பொத்திப்பிடித்த போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். வீதியால் சென்ற மக்கள் இதனை Read More

Read more