இலங்கையில் வெளிநாட்டு நிறுவனங்கள்….. ஆரம்பமாகின சேவைகள்!!

இலங்கையில் எரிபொருள் விலைக் கழிவுடன் சினோபெக் எனர்ஜி லங்கா(Sinopec) தனது விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிறுவனம் கொழும்பு – மத்தேகொட பகுதியில் உள்ள அதன் முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று(30/08/2023) தனது உத்தியோகபூர்வ எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு லீற்றருக்கு தலா 03 ரூபா விலைக் கழிவுடன் தமது விநியோகத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழைவதற்காக சீனாவின் சினோபெக்(Sinopec), அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம்(United Petrole   Read More

Read more

பஸ் இல் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்த 16 வயது மாணவன்….. மின் கம்பத்துடன் சென்றது தலை!!

கல்வி சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் மாணவர் ஒருவர் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருமஸ்ஸால மலையை நோக்கி செல்லும் வீதியில் நேற்று(20/08/2023) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்தின் பின் இருக்கையில் பயணித்த மாணவன் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்ததால் மின்கம்பத்தில் தலை மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த மாணவர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். Read More

Read more

யாழில் கோரவிபத்து….. உயிரிழந்த கணவன் – ஆபத்தான நிலையில் மனைவி!!

யாழ்ப்பாணம் -நாவற்குழி சந்தியில் இன்று (19/08/2023) விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் பவுசர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் ஆணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், விபத்துக்குள்ளானவர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பவுசர் வாகனத்துடன் மோதிய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மன்னாரைச் சேர்ந்தவர்கள் என அறியமுடிகின்றது. இச் சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Read more

தெஹிவளை மிருககாட்சிச்சாலையில் சோகமான சம்மபவமொன்று பதிவு!!

தெஹிவளை மிருககாட்சிச்சாலையில் பணியாற்றும் பிரதான பாதுகாப்பு உத்தியோகத்தர் மரம் முறிந்து வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். நேற்று(15/08/2023) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 54 வயதான உபுல் செனரத் மரகண்டா என்ற பிரதான பாதுகாப்பு அதிகாரியே உயிரிழந்தவராவார். மிருகக்காட்சிசாலையின் பிரதான வீதிக்கு அருகில் உள்ள கால்நடை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பாரிய மரம் வேரோடு சாய்ந்து மின்கம்பிகள் இணைக்கப்பட்டிருந்த கம்பத்தில் மோதியுள்ளது. இதன்போது மதிய உணவை எடுத்து வந்த பிரதான பாதுகாப்பு அதிகாரி மீது மின்கம்பம் தலையில் மோதியுள்ளது. இதனால் அவர் Read More

Read more

நாளை முதல் குறைகின்றன 9 வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்!!

நாளை (17/08/2023) முதல் 9 வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. நுகர்வோர் மீதான சுமையைக் குறைக்கும் வகையில் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக சதொச நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, பின்வரும் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. 1 கிலோ சோயாவின் (மொத்த விற்பனை) விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 625 ரூபாவாகும். நெத்தலி ஒரு கிலோவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் Read More

Read more

முல்லைத்தீவு – பாலிநகர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்….. நால்வர் கைது!!

முல்லைத்தீவு – மல்லாவி, பாலிநகர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த (10/07/2023)அன்று பாலிநகரில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 23 வயதான இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். வீடொன்றினுள் நுழைந்து சரமாரி துப்பாக்கிச் சூடு – பறிபோனது 23 வயது இளைஞரின் உயிர்….. முல்லைதீவில் சம்பவம்!! – Pasanga FM இதனை தொடர்ந்து, இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் Read More

Read more

கடல் பகுதியில் மணல்களை அகழ பயன்படும் கப்பலின் தோற்றத்தை ஒத்த கப்பல்…. மன்னாரில் கரைதட்டி ஒதுங்கியது!!

இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும் பாரிய கப்பல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை(07/07/20223) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில்  உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை இலங்கை கடற்படையினர் மீட்டு நடுக்குடா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். குறித்த கப்பல் கடல் பகுதியில் காணப்படும் மணல்களை அகழ்வதற்காக பயன்படும் கப்பலின் தோற்றத்தை ஒத்ததாக காணப்படுகின்றது கப்பலில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக கப்பல் தரை தட்டியிருக்கலாம் என ஒரு புறம் சந்தேகிக்கப்படுகின்றது. இவ்வாறு Read More

Read more

யாழில் இருந்து கதிர்காமம் நோக்கிய பயணம்….. குடைசாய்ந்த பேருந்து – ஆபத்தான நிலையில் 08 பேர்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற தனியார் பேருந்து இன்று(02/07/2023) அதிகாலை விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளதுடன் இளைஞர் ஒருவரின் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாரதியின் கவனக்குறைவு காரணமாக திருகோணமலை மொரவ பகுதியில் இந்த விபத்து அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மஹதிவுல்வெவ மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் பரதன்(வயது 33) என Read More

Read more

Whatsapp நிறுவனம் தனது பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதாக வரும் தகவலை நம்பி Pink Colour Whatsapp ஐ தொட்டீர்கள் என்றால் உங்கள் ஸ்மார்ட் போன் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் இப்போது குறி வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, Whatsapp செயலியை பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு அண்மையில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்த குறுஞ்செய்தியில் வரும் இணைப்பை (link) கிளிக் செய்தால் Whatsapp logo Pink நிறத்திற்கு மாறும் என்றும், Read More

Read more

மீண்டும் குறையும் எரிவாயு விலை….. லிட்ரோ நிறுவனத்திடமிருந்து அறிவிப்பு!!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை ஜூலை மாத தொடக்கத்தில் மீண்டும் குறைக்கப்படவுள்ளது. இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஜுன் மாதம் 04 ஆம் திகதி சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 452 ரூபாவால் குறைக்கப்பட்டு 3186 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. 5 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு 181 ரூபாவால் குறைக்கப்பட்டு 1281 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், Read More

Read more