நாளை முதல் குறைகின்றன 9 வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்!!

நாளை (17/08/2023) முதல் 9 வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. நுகர்வோர் மீதான சுமையைக் குறைக்கும் வகையில் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக சதொச நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, பின்வரும் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. 1 கிலோ சோயாவின் (மொத்த விற்பனை) விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 625 ரூபாவாகும். நெத்தலி ஒரு கிலோவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் Read More

Read more

வடக்கின் முன்னணி பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

வட மாகாணத்தில் முன்னணி பாடசாலைகளில் மின்சார கட்டணம் மற்றும் ஏனைய பாடசாலை செலவுகளுக்காக பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிட முடியாது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கில் உள்ள பிரபல பாடசாலைகள் சில பாடசாலை மின்சார கட்டணம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை ஈடு செய்வதற்காக மாணவர்களிடம் பணம் Read More

Read more

இலங்கையை எச்சரிக்கிறது உலக வங்கி….. உலக வங்கியின் பொரிஸ் ஹடாட் சர்வோஸ்தெரிவிப்பு!!

பொருளாதார நெருக்கடி நிலைமையானது தொடர்ந்து உக்கிரமடைந்தால் மக்கள் அதிகளவில் நாட்டை விட்டுச் செல்வார்கள் என உலக வங்கியின் இலங்கை, மாலைதீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான பணிப்பாளர் பொரிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(20/07/2023) கொழும்பில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறிய அவர் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மிகவும் கவலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கும் குடும்பங்கள் தமது Read More

Read more

26 பயணிகளுடன் சென்ற பேருந்து 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து – சரியாக கூறப்படாத உயிரிழப்புகள் – கவலைக்கிடமான நிலையில் பலர்….. முழுமையான அலசல்!!

முதலாம் பகுதி பூண்டுலோயா காவல்துறை பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை – வட்டக்கொடையில் இருந்து மடக்கும்புர பகுதியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று துனுகெதெனிய, கிரிடிகெட்டிய பிரதேசத்தில் நேற்று(09/07/2023) மாலை வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பூண்டுலோயா காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 26 பேர் பயணித்துள்ளதுடன் இதில் காயமடைந்த 24 பேரை கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலதிக சிகிச்சைக்காக Read More

Read more

இரு மாணவர்களின் உயிரை பறித்த கோர விபத்து!!

நேற்றையதினம் (03/07/2023) வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற இரு விபத்துகளில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஹுங்கம காவல்துறை பிரிவிற்குட்பட்ட ரகவா கஹதாவ வீதியில் தெற்கு கஹதாவ பகுதியில் மகிழுந்து மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் சாரதி தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். கஹடவ, ரன்ன பிரதேசத்தில் வசிக்கும் 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை, ஹலவத்த – குருநாகல் வீதியில் ஹெட்டிபொல Read More

Read more

யாழில் இருந்து கதிர்காமம் நோக்கிய பயணம்….. குடைசாய்ந்த பேருந்து – ஆபத்தான நிலையில் 08 பேர்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற தனியார் பேருந்து இன்று(02/07/2023) அதிகாலை விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளதுடன் இளைஞர் ஒருவரின் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாரதியின் கவனக்குறைவு காரணமாக திருகோணமலை மொரவ பகுதியில் இந்த விபத்து அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மஹதிவுல்வெவ மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் பரதன்(வயது 33) என Read More

Read more

Whatsapp நிறுவனம் தனது பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதாக வரும் தகவலை நம்பி Pink Colour Whatsapp ஐ தொட்டீர்கள் என்றால் உங்கள் ஸ்மார்ட் போன் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் இப்போது குறி வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, Whatsapp செயலியை பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு அண்மையில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்த குறுஞ்செய்தியில் வரும் இணைப்பை (link) கிளிக் செய்தால் Whatsapp logo Pink நிறத்திற்கு மாறும் என்றும், Read More

Read more

நான்கு பெரிய வாகனங்கள் மோதி பாரிய விபத்து….. கவலைக்கிடமாகவுள்ளது 5 பேரின் நிலைமை!!

கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் இன்று (26/06/2023) காலை இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். புஸ்ஸல்லா பயிற்சி நிலையத்திற்கு அருகில் தனியார் பேருந்து வழுக்கிச் சென்று சொகுசு பேருந்துடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. சொகுசுப் பேருந்து முன்னோக்கி நகரந்தமையினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் வான் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

நாளுக்கு நாள் அதிபலத்துடன் முன்னேறும் உக்ரைன் படை….. ஒரே நாளில் 670 பேர் என மொத்தமாக 219 840 பேரைக் கொன்றொழித்து சாதனை!!

உக்ரைனின் படையினர் ஒரே நாளில் 12 ரஷ்ய தாங்கிகள் மற்றும் 22 பீரங்கி அமைப்புகளை அழித்ததாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூன் 16 – 17 அன்று நடந்த மோதலில் 670 ரஷ்ய படையெடுப்பாளர்களைக் கொன்றதுடன் அவர்களின் 12 தாங்கிகள் மற்றும் 23 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன்பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, 24 பெப்ரவரி 2022 மற்றும் 17 ஜூன் 2023 க்கு இடையில்  ரஷ்யப் படைகளின் மொத்த போர் இழப்புகள் வெளியாகி உள்ளன. Read More

Read more

வாகன இறக்குமதிக்கு அனுமதியில்லை….. வெளியாகிய அதிரடி அறிவிப்பு!!

தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சுமார் 900 பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் கடுமையான நிபந்தனைகளின் கீழ் பொருளாதாரத்தை நிர்வகித்து வருவதாக அவர் கூறியுள்ளார். இந்தநிலையில், நாட்டின் தற்போதைய நிலைமையை ஆராய்ந்த பின்னரே வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கமுடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிபொருள் கொள்வனவுக்காக 80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்ட பின்னரும் அது Read More

Read more