Whatsapp நிறுவனம் தனது பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதாக வரும் தகவலை நம்பி Pink Colour Whatsapp ஐ தொட்டீர்கள் என்றால் உங்கள் ஸ்மார்ட் போன் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் இப்போது குறி வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, Whatsapp செயலியை பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு அண்மையில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்த குறுஞ்செய்தியில் வரும் இணைப்பை (link) கிளிக் செய்தால் Whatsapp logo Pink நிறத்திற்கு மாறும் என்றும், Read More

Read more

நான்கு பெரிய வாகனங்கள் மோதி பாரிய விபத்து….. கவலைக்கிடமாகவுள்ளது 5 பேரின் நிலைமை!!

கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் இன்று (26/06/2023) காலை இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். புஸ்ஸல்லா பயிற்சி நிலையத்திற்கு அருகில் தனியார் பேருந்து வழுக்கிச் சென்று சொகுசு பேருந்துடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. சொகுசுப் பேருந்து முன்னோக்கி நகரந்தமையினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் வான் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

நாளுக்கு நாள் அதிபலத்துடன் முன்னேறும் உக்ரைன் படை….. ஒரே நாளில் 670 பேர் என மொத்தமாக 219 840 பேரைக் கொன்றொழித்து சாதனை!!

உக்ரைனின் படையினர் ஒரே நாளில் 12 ரஷ்ய தாங்கிகள் மற்றும் 22 பீரங்கி அமைப்புகளை அழித்ததாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூன் 16 – 17 அன்று நடந்த மோதலில் 670 ரஷ்ய படையெடுப்பாளர்களைக் கொன்றதுடன் அவர்களின் 12 தாங்கிகள் மற்றும் 23 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன்பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, 24 பெப்ரவரி 2022 மற்றும் 17 ஜூன் 2023 க்கு இடையில்  ரஷ்யப் படைகளின் மொத்த போர் இழப்புகள் வெளியாகி உள்ளன. Read More

Read more

வாகன இறக்குமதிக்கு அனுமதியில்லை….. வெளியாகிய அதிரடி அறிவிப்பு!!

தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சுமார் 900 பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் கடுமையான நிபந்தனைகளின் கீழ் பொருளாதாரத்தை நிர்வகித்து வருவதாக அவர் கூறியுள்ளார். இந்தநிலையில், நாட்டின் தற்போதைய நிலைமையை ஆராய்ந்த பின்னரே வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கமுடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிபொருள் கொள்வனவுக்காக 80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்ட பின்னரும் அது Read More

Read more

வவுனியா கன்னாட்டி பகுதியில் நெஞ்சை உருக்கும் சம்பவம்….. தாயும் மகளும் உடல் நசுங்கி பலி!!

வவுனியா – கன்னாட்டி பகுதியில் பாடசாலைக்கு தனது மகளை அனுப்புவதற்காக சென்ற தாயும் அவரது 9 வயதான மகளும் டிப்பர் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று(16/06/2023) காலை 7 மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காக காத்திருந்தனர். இதன்போது, வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக பயணித்த டிப்பர் வாகனம் Read More

Read more

இலகு முறையில் கடவுச்சீட்டு….. இன்று முதல் புதிய நடைமுறை!!

கடவுச்சீட்டுகளை இலகுவான வழியில் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பொதிகள் சேவை மூலம் வீட்டுக்கு பெற்றுக்கொடுக்க முடியும். பிரதேச செயலகங்களில் செயற்படும் ஆட்பதிவு திணைக்களத்தில் Read More

Read more

தமிழர் பகுதியில் கோர விபத்து..! சம்பவ இடத்தில் இருவர் பலி

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் கனரக வாகனமொன்றுடன் சொகுசு வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் இருவர் பலியாகியுள்ளதாக ஹபரன காவல் துறையினர் தெரிவித்தனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று(6) காலை அலுத்ஒயா, சிங்ககம பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து கிண்ணியாவுக்குச் சென்ற சொகுசு வாகனம் ஒன்றும், திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் சீமேந்து கலவையை ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் சொகுசு வாகனத்தில் பயணித்த கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 47 வயதுடைய இருவர் பலியாகியுள்ளனர். கனரக Read More

Read more

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை – வெளியாகிய மகிழ்ச்சி தகவல்

இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையிலேயே இந்த விலை குறைப்பு இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் பாணின் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் பாணின் விலை 200 ரூபா வரை விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Read more

உலகளவில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இலங்கைக்கு துணைத்தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளும் ஏகமனதாக இந்த தெரிவினை மேற்கொண்டுள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி மொஹான் பீரிஸ் இந்தப் பதவியை பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளார். எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2024ம் ஆண்டு செப்டம்பர் வரையில் ஆசிய பசுபிக் பிராந்திய வலயத்தின் சார்பில் இந்த பதவியை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிவியா, கொங்கோ, எஸ்டோனியா, காம்பியா, ஐஸ்லாந்து, ஈரான், மலேசியா, Read More

Read more

உயர்வடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி!!

இந்த வருடத்தில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 24.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் அறிக்கை ரூபாவின் பொறுமதி தொடர்பில் மத்திய வங்கி நேற்று(02.06.2023) வரை வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கை ரூபா ஜப்பானிய யெனுக்கு எதிராக 30 வீதத்தாலும், பிரித்தானிய பவுண்டிற்கு எதிராக 19.4 வீதத்தாலும் மிகைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், யூரோவுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி 23 வீதமும், இந்திய ரூபாயுடன் ஒப்பிடுகையில் 23.5 வீதமும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி Read More

Read more