நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோற்சவ திருவிழா….. யாழ் மாவட்ட காவல் துறைக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!!

நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோற்சவ திருவிழா நாட்களின் போது குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடைவிதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (08/08/2023) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. அந்தவகையில், திருவிழா நேரங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதருவோரால் ஆலய வீதிகளில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபடுவதை தடுக்கும் முகமாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது. Read More

Read more

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூரான் மகோற்சவம்….. புதிய நடைமுறைகள் வெளியீடு!!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையினால் விளக்கமளிக்கப்பட்டது. மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று(26/07/2022) காலை 9 மணியளவில் யாழ் மாநகர சபையில் இடம்பெற்றது. ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நல்லூர் மஹோற்சவம் வழமைபோன்று அதாவது 2018 ஆம் Read More

Read more

“முழங்கால் தெரிய ஆடை அணிந்து வரும் பெண்களுக்குக்காக” நல்லூரில் புதிய நடைமுறை!!

நல்லூர் ஆலயத்தில் இந்து மத பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு ஆலய முகப்பில் சால்வை வழங்கப்படும் நடைமுறை நேற்று  அறிமுகப்படுத்தப்பட்டது. ஆலயத்திற்குள் சால்வையை அணிந்து சென்று வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர் அதனை பை ஒன்றிலிட்டு வழங்கப்பட்ட இடத்திலுள்ள பெட்டியில் மீள வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

Read more