நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது 22ஆவது திருத்தம்….. இரண்டாவது நாளாக இடம்பெறும் ‘ஒத்திவைப்பு வேளை விவாதம்’!!

கடந்த வாரம் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் இன்று(10/08/2022) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

இதேவேளை,

ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட ஒத்திவைப்பு வேளை விவாதம் இரண்டாவது நாளாக தொடர்ந்தும் இடம்பெறுகின்றது.

கொள்கை அறிக்கை மீதான மூன்று நாள் ஒத்திவைப்பு விவாதம் நேற்று ஆரம்பமானது.

ஆகஸ்ட் 12 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இது ஒத்திவைப்பு வேளை விவாதம் என்பதால்,

விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என நாடாளுமன்றத்தின் செயலாளர் தம்மிக்க தசநாயக்கா தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான, 2021 ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டுச் சட்டம் தொடர்பான திருத்தச் சட்டமூலம் நேற்றைய அமர்வின் போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதம் இன்று(10/08/2022) இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *