#lock down

LatestNews

மீண்டும் முடங்குமா நாடு! வெளிவந்து புதிய அறிவிப்பு!!

எதிர்வரும் விடுமுறை நாட்களில் நாட்டை முடக்குவது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More
LatestNews

கொரோனா கட்டுபாடுகள் நீக்கம் தொடர்பில் இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு!!

நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த கொரோனா சுகாதார கட்டுப்பாடுகள் சில நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலைமை காரணமாக விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி ஒன்று இன்று வெளியிடப்பட உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஏற்கனவே, 5 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் கடந்த 4ஆம் திகதி சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNews

யாழ்ப்பாணம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பல பகுதிகள் முடக்கம்!!

இன்று (06) காலை 6 மணி முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மூன்று மாவட்டங்களில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாத்தறை, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நான்கு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார். மாத்தறை உயன வத்த உயன வத்த வடக்கு யாழ்ப்பாணம் நாரந்தனை வடமேற்கு களுத்துறை புஹாபுடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மலபடவத்த

Read More
LatestNews

இலங்கையில் டெல்டா பரவக்கூடிய அபாயம் – ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை!!

உலக நாடுகளில் தற்போது பாரிய அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ள டெல்டா மரபணு மாற்றமடைந்த கொரோனா தொற்று இலங்கையில் மேலும் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதா இல்லையா என்கிற தீர்மானம் அடுத்தவாரத்தில் எடுக்கப்படலாம் என்று சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இலங்கையில் டெல்டா மாறுபாடான கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 05 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலயைில் தொற்று மேலும் பரவக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது. Read More

Read More
LatestNews

நாட்டில் உடன் அமுலாகும் வகையில் முடக்கப்பட்டுள்ள பகுதிகள்!!

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மிராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலை ஆகிய கிராமங்கள் இன்று புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார். ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து காணப்படுவதுடன், மரணங்களும் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை அவசர கூட்டம் இடம்பெற்ற போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓட்டமாவடி Read More

Read More
LatestNews

அதிகரிக்கும் தொற்றாளர்கள்! முடக்கப்படுமா யாழின் ஒரு பகுதி?!!

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே 103(அரசடி) கிராம அலுவலர் பிரிவில் ஒரு பகுதியினை முடக்குவதற்கு யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் மாகாண சுகாதார பணிப்பாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக 22 பேர் குறித்த பகுதியில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதன் காரணமாக முடக்குவதற்கு யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் மாகாண சுகாதார பணிப்பாளர் அரச அதிபர் ,யாழ் பாதுகாப்பு படை தளபதி ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More

Read More
LatestNews

பயணத் தடை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு! இராணுவ தளபதி தகவல்!!!!

தற்போது அமுலில் உள்ள பயண கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் கொவிட் தடுப்பு தேசிய செயலணி உறுப்பினர்களும் இடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அதற்கமைய, எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 4 ஆம்திகதிகளில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படாமல், தொடர்ந்தும் ஜூன் 7 ஆம்திகதிவரை நீடிக்கும் என Read More

Read More
LatestNews

இராணுவத்தளபதி வெளியிட்ட மற்றுமொரு அறிவிப்பு – மதுபான சாலைகள் பூட்டு!!

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை அடுத்து பல்பொருள் அங்காடிகளில் இயங்கும் மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 7 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் வரையில் குறித்த மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் இயங்கும் மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Read More
LatestNews

யாழ் நகரில் களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தின் மோட்டார் சைக்கில் படையணி!!!!!!!

நாட்டில் தற்பொழுது பயணத் தடை விதிக்கப்பட்டு இன்றைய தினம் பயணத் தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் நகரப் பகுதியில் மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுகின்ற நிலைமை காணப்படுகின்றது இதன்காரணமாக யாழ்ப்பாண நகரப் பகுதியில் சன நெரிசலை கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தினர் வீதிகளில் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணியினர் குறித்த போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

Read More
LatestNews

நாடு முழுவதும் நாளை இரவு முதல் முழு நாள் பயணத் தடை -இராணுவத்தளபதி அறிவிப்பு

#lock downநாடு முழுவதிலும் நாளை இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரையில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். எனினும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப்பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு தடை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த காலப் பகுதியில் மேல் மாகாணத்தில் செலுத்தப்படும் தடுப்பூசி தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிடுகின்றார். Read More

Read More