மூன்று தின விநியோகத்திற்கு போதுமான எரிவாயு மாத்திரமே இருப்பில்!!

டொலர்களை வழங்கிய பின்னர் நேற்று 3 ஆயிரத்து 500 மெற்றி தொன் சமையல் எரிவாயும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த தொகை சுமார் மூன்று தினங்களுக்கு மாத்திரமே போதுமானது என எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. லிட்ரோ எரிவாயு நிறுவனம் சுமார் 200 மெற்றி தொன் எரிவாயுவை தொழிற்சாலைகளுக்கு வழங்குகிறது. மீதமுள்ள எரிவாயு 12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2.5 கிலோ கிராம் கொள்கலன்களில் அடைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. ஒரு தொன் எரிவாயு மூலம் 12.5 கிலோ கிராம் Read More

Read more

எரிவாயு விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் மீள ஆரம்பம்….. லிட்ரோ நிறுவனம்!!

சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாளொன்றுக்கு 120,000 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எரிவாயுவை தாங்கி வந்துள்ள கப்பல்களுக்கான கொடுப்பனவுகள் நேற்று முன்தினம் மாலை செலுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று முதல் எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 3500 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவை கெரவலப்பிட்டியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனவே, தற்போது நிலவும் Read More

Read more

எரிவாயு விநியோகம் தொடர்பி்ல் வெளியாகியுள்ள மகிழ்ச்சியான தகவல்!

நாட்டில் எரிவாயு விநியோகம் இன்று முதல் வழமைக்கு திரும்பும் என அரச தலைவர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டிற்கு எரிவாயுவை ஏற்றி வந்துள்ள கப்பல்களுக்கான நிதி நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, எரிவாயுவைத் தரையிறக்கி, விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படும். எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்படும் என ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை நேற்று முதல் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Read More

Read more

மீளத் திருப்பி அனுப்பப்பட்டது எரிவாயு ஏற்றி வந்த கப்பல்!!

எரிவாயு ஏற்றி வந்த கப்பலொன்று மீளத் திருப்பி அனுப்பப்பட்டமையாலே  எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செயலாளர் டெரன்ஸ் அப்புஹாமி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சில பிரதேசங்களுக்கு சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தற்போது நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் இரண்டு வாரங்களின் பின்னர் நிவர்த்தியாகும் என லிட்ரோ பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று விநியோகிக்கப்பட்ட எரிவாயு சில பகுதிகளுக்கு போதுமான அளவு கிடைக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

Read more

சில விசேட தகன பயன்பாட்டுக்காக மட்டும் எரிவாயுவை பயன்படுத்த அனுமதி!!

தொழில் சார்ந்த மற்றும் உடல் தகன பயன்பாட்டுக்காக எரிவாயுவை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. லிட்ரோ (Litro) மற்றும் லாஃப்ஸ் (Laughs) எரிவாயு நிறுவனங்களுக்கே இந்த அனுமயினை நுகர்வோர் விவகார ஆணைக்குழு வழங்கியுள்ளது. எனினும், வீட்டுப் பாவனைக்காக சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் சடுதியாக விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சந்தையில் எரிவாயு விநியோகம் சீராக்கம் செய்யப்பட்டது. மேலும் Read More

Read more

லிற்றோ நிறுவனம் வழமைபோன்று விநியோகம் தொடரும் என அறிவிப்பு!!

லிற்றோ எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கும் செயற்பாடு வழமை போன்று தொடரும் என நிறுவனத்தின் பேச்சாளர் சிங்கள ஊடகெமொன்றுக்கு தெரிவித்தார். பராமரிப்பு பணிகளுக்காக தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தாலும், சிலிண்டரிலிருந்து வாயு வெளியேற்றம் சாதாரணமாகவே இருந்ததாக அவர் குறிப்பிட்டார். எனினும், விநியோகத்தை இடைநிறுத்துமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண(Lasantha Alagiyawanna,) லிட்ரோ மற்றும் லாப்ஸ் காஸ் ஆகிய இரண்டிற்கும் கடிதம் எழுதியுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வாயுக்களால் வெளிப்படும் துர்நாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் ‘மெர்காப்டன்’ என்ற Read More

Read more