லிற்றோ நிறுவனம் வழமைபோன்று விநியோகம் தொடரும் என அறிவிப்பு!!

லிற்றோ எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கும் செயற்பாடு வழமை போன்று தொடரும் என நிறுவனத்தின் பேச்சாளர் சிங்கள ஊடகெமொன்றுக்கு தெரிவித்தார்.

பராமரிப்பு பணிகளுக்காக தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தாலும், சிலிண்டரிலிருந்து வாயு வெளியேற்றம் சாதாரணமாகவே இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

எனினும்,

விநியோகத்தை இடைநிறுத்துமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண(Lasantha Alagiyawanna,) லிட்ரோ மற்றும் லாப்ஸ் காஸ் ஆகிய இரண்டிற்கும் கடிதம் எழுதியுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாயுக்களால் வெளிப்படும் துர்நாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் ‘மெர்காப்டன்’ என்ற இரசாயனக் கலவை போதுமானதாக இல்லாத காரணத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு எரிவாயு சிலிண்டரில் 14 யூனிட் இரசாயன கலவை இருக்க வேண்டும் என்றாலும் தற்போது 5 யூனிட்களே உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *