மீளத் திருப்பி அனுப்பப்பட்டது எரிவாயு ஏற்றி வந்த கப்பல்!!

எரிவாயு ஏற்றி வந்த கப்பலொன்று மீளத் திருப்பி அனுப்பப்பட்டமையாலே  எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செயலாளர் டெரன்ஸ் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சில பிரதேசங்களுக்கு சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,

தற்போது நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் இரண்டு வாரங்களின் பின்னர் நிவர்த்தியாகும் என லிட்ரோ பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,

நேற்று விநியோகிக்கப்பட்ட எரிவாயு சில பகுதிகளுக்கு போதுமான அளவு கிடைக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *