#Litro Gas Sri Lanka

LatestNewsTOP STORIES

வாடிக்கையாளர்களுக்கு லிற்றோ நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

வெளிப்புற பிரச்சினைகளே சந்தை விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக லங்கா லிற்றோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நாணயக் கடிதங்களை திறப்பது இப்போது எளிதானது. ஆனால், அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இன்னும் சில சவால்கள் உள்ளன என்று நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொள்வனவு கட்டளைகள் வருவதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும் நாட்டின் நிலையற்ற நிலை காரணமாக அடுத்த சில மாதங்கள் எப்படி இருக்கும் என்பதை கணிப்பது கடினம் என்று தெரிவித்துள்ளார். இதேவேளை, 5 நாட்களுக்கு பொது விடுமுறைக்காக தமது விநியோகத்தை Read More

Read More
LatestNewsTOP STORIES

மூன்று தின விநியோகத்திற்கு போதுமான எரிவாயு மாத்திரமே இருப்பில்!!

டொலர்களை வழங்கிய பின்னர் நேற்று 3 ஆயிரத்து 500 மெற்றி தொன் சமையல் எரிவாயும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த தொகை சுமார் மூன்று தினங்களுக்கு மாத்திரமே போதுமானது என எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. லிட்ரோ எரிவாயு நிறுவனம் சுமார் 200 மெற்றி தொன் எரிவாயுவை தொழிற்சாலைகளுக்கு வழங்குகிறது. மீதமுள்ள எரிவாயு 12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2.5 கிலோ கிராம் கொள்கலன்களில் அடைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. ஒரு தொன் எரிவாயு மூலம் 12.5 கிலோ கிராம் Read More

Read More
LatestNewsTOP STORIES

எரிவாயு விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் மீள ஆரம்பம்….. லிட்ரோ நிறுவனம்!!

சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாளொன்றுக்கு 120,000 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எரிவாயுவை தாங்கி வந்துள்ள கப்பல்களுக்கான கொடுப்பனவுகள் நேற்று முன்தினம் மாலை செலுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று முதல் எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 3500 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவை கெரவலப்பிட்டியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனவே, தற்போது நிலவும் Read More

Read More
FEATUREDLatestNews

லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் காப்புறுதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க (Desara Jayasinghe) அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் 1311 என்ற இலக்கத்துக்கு அழைப்பதன் மூலம் இந்த காப்புறுதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அனைத்து லிட்ரோ எரிவாயு பாவனையாளர்களுக்கும் 1 மில்லியன் ரூபாய் வரையான காப்புறுதியை பெற்றுக்கொள்ள முடியும். இந்த காப்புறுதி திட்டத்தின் மூலம் இதுவரையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையானவர்களே விண்ணப்பித்துப் பயன்பெற்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   Read More

Read More
LatestNewsTOP STORIES

மீளத் திருப்பி அனுப்பப்பட்டது எரிவாயு ஏற்றி வந்த கப்பல்!!

எரிவாயு ஏற்றி வந்த கப்பலொன்று மீளத் திருப்பி அனுப்பப்பட்டமையாலே  எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செயலாளர் டெரன்ஸ் அப்புஹாமி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சில பிரதேசங்களுக்கு சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தற்போது நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் இரண்டு வாரங்களின் பின்னர் நிவர்த்தியாகும் என லிட்ரோ பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று விநியோகிக்கப்பட்ட எரிவாயு சில பகுதிகளுக்கு போதுமான அளவு கிடைக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More
LatestNews

சில விசேட தகன பயன்பாட்டுக்காக மட்டும் எரிவாயுவை பயன்படுத்த அனுமதி!!

தொழில் சார்ந்த மற்றும் உடல் தகன பயன்பாட்டுக்காக எரிவாயுவை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. லிட்ரோ (Litro) மற்றும் லாஃப்ஸ் (Laughs) எரிவாயு நிறுவனங்களுக்கே இந்த அனுமயினை நுகர்வோர் விவகார ஆணைக்குழு வழங்கியுள்ளது. எனினும், வீட்டுப் பாவனைக்காக சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் சடுதியாக விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சந்தையில் எரிவாயு விநியோகம் சீராக்கம் செய்யப்பட்டது. மேலும் Read More

Read More