வடமாகாணத்தில் இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் உடனடியாக சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவும்…. வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன்!!

வடமாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை எந்தவொரு தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவில்லை என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் A.கேதீஸ்வரன் தெரிவித்தார். எனவே , இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரையும் உடனடியாக சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வடமாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 85 சதவீதமானவர்கள் முதலாம் கட்ட தடுப்பூசியையும் 62 சதவீதமானவர்கள் 2 ஆம் கட்ட தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டுள்ளதாக வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார். எந்தவொரு தடுப்பூசி மருந்தையும் பெற்றுக்கொள்ளாதவர்களே வட Read More

Read more

வடமாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரனிற்கு Covid19 உறுதி!!

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனுக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த சமயத்தில், அவருடன் பழகியவரென்ற அடிப்படையில், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read more

வீட்டில் பராமரிக்க திட்டம்!!

இன்று முதல் வடக்கு மாகாணத்திலும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ,கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டமானது இலங்கையின் மேல் மாகாணத்தில் மட்டும் பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டமானது தற்போது ஏனைய மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை முதல் Read More

Read more

யாழ். தென்மராட்சியில் சில பகுதிகள் முடக்கம்

யாழ். தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளுமே இன்றிரவு முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்படவுள்ளது. அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளையும் Read More

Read more