ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு ஏற்பட்ட நிலை – நிறுத்தப்படுமா சேவைகள்?

எரிபொருளுக்கான டொலர் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு சவுதி அரசாங்கத்துடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நிதி நிலை மற்றும் எரிபொருள் கட்டணங்கள் தொடர்பில் சவுதி அரசாங்கத்திடம் உதவி கோருவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

குறுகிய கால அல்லது நீண்ட கால கடன் வசதி அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், கடன் தொகை குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு வழங்கப்படும் எரிபொருளுக்கு ஈடாக அமெரிக்க டொலர்களை கோரியுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *