யாழ்ப்பாணத்திற்கான உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்திற்கான உள்நாட்டு விமான சேவைகள் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவையை ஜூலை 01 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடுக்குங்கள்…………………. எதிர்வரும் வரும் மாதங்களில் மேலும் பல உள்நாட்டு இடங்களுக்கு சேவைகளை முன்னெடுக்க டிபி ஏவியேஷன் நிறுவனத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக Read More

Read more

வரலாற்றில் முதல் தடவை உச்சம் தொட்ட பேருந்து கட்டணம்!!

முதல் தடவையாக இலங்கையின் போக்குவரத்து வரலாற்றில் 4000 ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான பேருந்து பயணச்சீட்டு வழங்கப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கான சொகுசு பேருந்து கட்டணம் 4450.00 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. குறித்த கட்டண உயர்விற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் இவ்வாறான கட்டண அதிகரிப்பு இடம் பெறவில்லை எனவும், இதன் காரணமாக போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.   அதற்கு பதிலாக டீசல் கொடுப்பனவு ஒன்றை வழங்கி கட்டணத்தை Read More

Read more

கொழும்பிற்கு வருவோருக்கு பொலிஸார் வழங்கியுள்ள விசேட அறிவுறுத்தல்!!

தலைநகர் கொழும்பிற்கு வருகை தருவோருக்கு பொலிஸார் விசேட அறிவுறுத்தலொன்றை வெளியிட்டுள்ளனர். பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தேவைகளுக்காக மக்கள் தலைநகர் கொழும்பிற்கு வருகின்றனர். காலி முகத்திடல், கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் காணப்படுவதனை அவதானிக்க முடிவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால் மக்கள் வேறு மாற்று வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாளை மாலை கொழும்பின் பல்வேறு பகுதிகளில் பாரியளவில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்து விபத்து….. பல்கலைக்கழக மாணவியொருவர் பலி – பலர் படுகாயம்!!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கிய பேருந்து தடம் புரண்டு அருகிலுள்ள வயலுக்குள் பாய்ந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்துத் தொடர்பில் தெரியவருகையில், மதவாச்சிக்கும் இகிரிகொல்லாவக்கும் இடைப்பட்ட வளைவில் 145வது மைல் கல்லிற்கு அருகில் உள்ள வளைவில் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் Read More

Read more