சாரதியின் கவனக்குறைவால் ஏற்பட்ட பாரிய விபத்து!!

கவனக்குறைவால் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து பாதுக்க-கொடகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்திற்கு பின், உந்துருளி விபத்து நடந்த இடத்தில் இருந்து 98 மீட்டர் தூரம் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டது அருகில் இருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.  

Read more

சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடமராட்சி மீனவர்கள்!!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்களின் படகு மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் ஐந்தாவது நாளாக இன்றைய தினமும் வடமராட்சி மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். மீனவர்கள் கடந்த 31ஆம் திகதி முதல் பருத்தித்துறை – பொன்னாலை வீதியினை வழி மறித்து நேற்றைய தினம் வியாழக்கிழமை வரையில் நான்கு நாட்களாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருந்தனர். அந்நிலையில், நேற்றைய தினம் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடை Read More

Read more