சாரதியின் கவனக்குறைவால் ஏற்பட்ட பாரிய விபத்து!!
கவனக்குறைவால் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து பாதுக்க-கொடகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்திற்கு பின், உந்துருளி விபத்து நடந்த இடத்தில் இருந்து 98 மீட்டர் தூரம் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டது அருகில் இருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.