#Hospital

indiaLatestNewsTOP STORIESWorld

பல் துலக்கிய பெண் வைத்தியசாலையில்!!!!

பல் துலக்கும் போது தவறி விழுந்ததில் வாயில் சிக்கிய பற்தூரிகையை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரேவதி என்பவர் காலைவேளை வழக்கம் போல் பல் துலக்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் பற் தூரிகை ரேவதியின் ஒரு பக்க கன்னத்தை கிழித்து மறுபுறம் சென்றுள்ளது. இதில் பற் தூரிகை அவரது வாய் பகுதியில் சிக்கி பலத்த காயம் அடைந்தது. இதை கண்ட அருகில் இருந்தவர்கள் ரேவதியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு Read More

Read More
LatestNewsTOP STORIES

எதிர்வரும் வாரம் முதல் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தீர்மானித்துள்ளோம்….. GMOA!!

எதிர்வரும் திங்கட்கிழமை (21) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற மத்தியக்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. சம்பளம் மற்றும் பணியாளர்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளாமல், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் தன்னிச்சையாக சம்பளத்தை அதிகரிக்கும் முயற்சிகளுக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் மத்தியகுழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் பிரசாத் (Vasan Ratnasingam Prasad) தெரிவித்தார். எவ்வாறாயினும், மத்திய குழு மேற்கொண்டுள்ள அடையாள வேலை Read More

Read More
LatestNewsTOP STORIES

மீண்டும் பணி பகிஷ்கரிப்பில் இறங்கிய அரச சுகாதார ஊழியர்கள்!!

அரச சுகாதார ஊழியர்கள் இன்று (07) காலை 7.00 மணி முதல் காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். தமது ஏழு கோரிக்கைகளுக்கு உறுதியான தீர்வுகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தவறிவிட்டதாக மருத்துவ ஆய்வக அறிவியல் கல்லூரியின்  தலைவர் ரவி குமுதேஷ் (Ravi Kumudesh) தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, மருத்துவ ஆய்வாளர்கள், மருந்தாளுநர்கள், கதிரியக்க வல்லுநர்கள், பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் குடும்ப சுகாதார அலுவலர்கள் உட்பட சுகாதார நிபுணர்களைக் கொண்ட 16 குழுக்கள் இன்று போராட்டத்தில் Read More

Read More
LatestNewsTOP STORIES

பெண் மாணவிகள் மோதல் – ஒருத்தி வைத்தியசாலையில்….. யாழ் பல்கலைக்கழகத்தில் சம்பவம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவிகள் மோதிக்கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக மாணவிகள் இருவர் தாம் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் மோதிக்கொண்டுள்ளனர். அதில் காயமடைந்த மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More
indiaLatest

யாழில் மீண்டும் மலேரியா நோய்!!

நீண்ட காலத்தின் பின் யாழ்ப்பாணத்தில் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவருக்கே மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த நபரொருவரே தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார். கடுமையான காய்ச்சல் மற்றும் மலேரியா அறிகுறிகளுடன் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணப் பிராந்திய மலேரியாத் தடுப்பு வைத்திய அதிகாரியின் Read More

Read More
LatestNews

யாழில் விபரீதத்தில் முடிந்த விளையாட்டு செயல்!!

தனது பெண் நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து கழுத்தில் கயிறு போட்டு நேரலை காணொளியில் காண்பித்த இளைஞன் கயிறு இறுகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வீரசிங்கம் ஸ்ரான்லின் ஜெயசிங்கம் (வயது -31) என்ற இளைஞன் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அச்சகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர் தான் தங்கியிருக்கும் அறையில் கதிரையில் ஏறி கூரை மரத்தில் கயிற்றைப் போட்டு கழுத்தில் சுருக்கிட்டு தனது பெண் Read More

Read More
CINEMAindiaLatestNewsWorld

“நீங்க இல்லாமல் நான் இல்லை” என்கிறார் சிம்பு!!

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் சிம்பு, நீங்க இல்லாமல் நான் இல்லை என்று கூறியிருக்கிறார். நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சிம்பு தனது அடுத்த இன்னிங்சை தொடங்கிவிட்டார் என அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன்- ஏ.ஆர்.ரஹ்மான்-சிம்பு Read More

Read More
LatestNews

வீடொன்றின் மதில் சுவரை இடுத்து உள்ளே சென்ற கார்….. ஆபத்தான நிலையில் இருவர்!!

மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்  இன்று காலை 9 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீட்டு வளவிற்குள் புகுந்ததில்  விபத்திற்குள்ளாகிய இருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து இடம்பெற்ற பகுதியில் அமைந்துள்ள தங்களது வீட்டு வாசலில் நின்று கதைத்துக் கொண்டிருந்த இவரே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் Read More

Read More
LatestNews

திடீர் மின்தடை….. சத்திரசிகிச்சை நோயாளர்கள் எட்டு பேர் பாதிப்பு!!

நாட்டில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 8 நோயாளர்களின் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதையடுத்து தேசிய வைத்தியசாலை அதிகாரிகளின் அலட்சியப்போக்கினால் பல அப்பாவி நோயாளிகளின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இன்றையதினம் முற்பகல் வேளை தொடக்கம் திடீரென நாடு முழுவது மின்சாரத்தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More
CINEMAindiaLatestNewsWorld

கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை!!

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமலின் உடல்நிலைக்குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு நவம்பர் 22ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் கமல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மருத்துமனை கமலின் Read More

Read More