திடீர் மின்தடை….. சத்திரசிகிச்சை நோயாளர்கள் எட்டு பேர் பாதிப்பு!!
நாட்டில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 8 நோயாளர்களின் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதையடுத்து தேசிய வைத்தியசாலை அதிகாரிகளின் அலட்சியப்போக்கினால் பல அப்பாவி நோயாளிகளின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்றையதினம் முற்பகல் வேளை தொடக்கம் திடீரென நாடு முழுவது மின்சாரத்தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.