நாட்டில் 48 மணி நேரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவு!!
தெற்கின் அஹங்கம பிரதேசத்தில் 27 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அஹங்கம, பஞ்சாலயவில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொல்லப்பட்ட நபர் திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும்,
அவர் தற்போது ஒரு வழக்கு தொடர்பாக பிணையில் இருப்பதாகவும்காவல்துறையினர் தெரிவித்தனர் .
கடந்த 48 மணி நேரத்தில் பதிவான 3வது துப்பாக்கிச்சூடு,
சம்பவம் இதுவாகும்.
பாணந்துறை நிர்மலா மாவத்தை பகுதியில் வைத்து 31 வயதுடைய நபர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார்.
நேற்று முன்தினம் அளுத்கம மொரகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை கைது செய்ய 10 காவல்துறை குழுக்களை நியமித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.