தற்காலிக கூடாரங்களை அகற்றியதால் நடு வீதியை வீடாக்கிய போராட்டகாரர்கள்!!

அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் நடுவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அலரிமாளிகைக்கு அருகில் வீதியோர போராட்டக் கூடாரங்களை காவல்துறையினர் அகற்றியதையடுத்து அவர்கள் இவ்வாறு நடுவீதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாக மைனாகோகமவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 7 ஆவது நாளாகவும் தொடர்கிறமை குறிப்பிடத்தக்கது.

Read more

தொடர்ந்து கொழும்பு கடற்பகுதியில் படையெடுக்கும் முதலைகள்!!

காலி முகத்திடல் கடற்பகுதியில் நேற்றைய தினம் முதலை ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை மற்றும் காலி முகத்திடல் கடற்பகுதிகளில் 3 முதலைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்றாம் திகதி தெஹிவளை, தொடருந்து நிலையத்திற்கு அருகில் முதலை தாக்கி ஒருவர் உயிரிழந்தார். எவ்வாறாயினும், தெஹிவளை கடற்பகுதியில் பிரவேசித்த முதலை இன்னும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் பிடிக்கப்படவில்லை. மேலும், இந்நிலையில், காலி முகத்திடலில் நேற்றைய தினம் அவதானிக்கப்பட்ட முதலை சிறிய அளவுடையது எனவும், Read More

Read more

கடும் காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு சாத்தியம்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் Read More

Read more

25 உயிரிழந்த கடலாமைகள் கரையொதுங்கின!!

இன்றும் நாட்டின் சில கடற்கரைகளில் உயிரிழந்த கடலாமைகள் கரையொதுங்கின. இதுவரையில் சுமார் 25 கடலாமைகள் கரையொதுங்கியுள்ளன. கொழும்பு – காலி முகத்திடலில் இன்று கரையொதுங்கிய கடல் ஆமையின் உடலில் இரத்தக் கறை படிந்துள்ளது. காலி, கொஸ்கொட, தூவேமோதர மற்றும் மஹா இந்துருவ ஆகிய கடற்கரைகளிலும் உயிரிழந்த கடல் ஆமைகள் கரையொதுங்கியுள்ளன. இதேவேளை, கிளிநொச்சி வலைப்பாடு கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆமை ஒன்று இன்று கரையொதுங்கியிருந்தது. அந்த ஆமையின் உடலை கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் கொண்டுசென்றனர்.

Read more