வாளால் வெட்டி விட்டு – வீட்டுக்கு தீ வைப்பு….. இளம் குடும்ப பெண் மற்றும் கணவன் மரணம் – 09 பேர் படுகாயம்!!

வவுனியா – தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவினை பெற்று நடத்திய விசாரணையின் பின்னர் கூமாங்குளத்தைச் சேர்ந்தவரும் சம்பவத்தில் மரணமடைந்த சுகந்தனின் நண்பராக இருந்து பெண் விவகாரத்தால் பின்னர் பிரிந்தவருமான நண்பரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று(03/08/2023) கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் நீதவான் முன்னிலையில் விசாரணைக்குட்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை,

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் 24 மணி நேரம் வவுனியா தலைமை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சுபாசினி தேவராசா நேற்று(02/08/2023) உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா – தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்திருந்தனர்.

இச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் நபரை 24 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரணை செய்ய சிஐடிக்கு வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 23 ஆம் திகதி வவுனியா – தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த குழு வீட்டு உரிமையாளர் மீது வாளால் வெட்டிவிட்டு வீட்டுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருந்தனர்.

குறித்த சம்பவத்தில் இளம் குடும்ப பெண் மூச்சு திணறல் காரணமாகவும், அவரது கணவன் தீயில் எரிந்தமை காரணமாகவும் மரணமடைந்திருந்ததுடன் மேலும் 9 பேர் காயமடைந்திருந்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்பில் காவல்துறையினர் மற்றும் சிஐடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்,

ஐவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் குறித்த சம்பவத்தின் பிரதான சந்தே நபராக கருத்தப்படும் கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று(02/08/2023) மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.

இன்று(03/08/2023) குறித்த நபரை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய சிஐடியினர் அவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரினர்.

அதற்கு அமைய 24 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *