நாளைய மின்வெட்டு தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

நாளை வியாழக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்படுவது தொடர்பில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது. இதன்படி நாளையதினம் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டால் வழமை போன்று 03 மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். மாறாக ஊரடங்குச்சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டால் எரிபொருள் கிடைக்காமை மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக மின்வெட்டு 5 மணிநேரமாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Read more

ராஜபக்சர்களின் சகாக்களுக்கு அடுத்தடுத்து பேரிடி!!

இன்று நாட்டில் ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அவர்களது அலுவலகங்கள் மக்களினால் முற்றுகையிடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டு வருகிறது. இன்று இதுவரைக்கும் எரியூட்டப்பட்ட வீடுகள், அலுவலகங்கள் பற்றிய தகவல்கள் வருமாறு, 1- சனத் நிஷாந்தவின் வீடுகள் 2- திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு 3- குருணாகல் மேயரின் இல்லம் 4- ஜோன்ஸ்டனின் வீடு மற்றும் அலுவலகம் 5- மொரட்டுவ மேயர் சமன் லாலின் வீடு 6 – என் அனுஷா பாஸ்குவலின் வீடு Read More

Read more

ரம்புக்கனையில் கடும் பதற்றம் – ஊரடங்கு அமுல்

ரம்புக்கனை காவல்துறை பிரிவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை  தொடரும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். ரம்புக்கனையில் புகையிரத கடவைக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் நிலையைத் தொடர்ந்து காவல்துறையால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்ததுடன் நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியதால் தற்போது ஊரடங்கு Read More

Read more

மருந்துகளுக்கு தட்டுப்பாடு: சுகாதார அவசர நிலையை நாட்டில் பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை

சுகாதார அவசர நிலையை நாட்டில் பிரகடனப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையிலேயே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடிதம் மூலம் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. மேலும் சகல தரப்பினரையும் அழைத்து ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாடு மற்றும் மருத்துவ உபகரணங்களின் Read More

Read more

எரிபொருள் நிரப்பச் வென்றவர் திடீர் மரணம்

வென்னப்புவை- தம்பரவில பகுதியில் எரிபொருள் நிலையத்திற்கு அருகில் மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளது. இன்று காலை 7.30 அளவில் குறித்த பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இந்த மரணம் சம்பவித்துள்ளது. கொச்சிக்கடை – போருதொட்ட பகுதியில் வசித்து வந்த மொஹமட் ஜெஸ்மின் என்ற நபரே இவ்வாறு மரணித்துள்ளார். காருக்கு எரிபொருளை நிரப்ப அவர் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு வந்துள்ளதுடன், எரிபொருளை நிரப்பிய பின்னர் சில அடி தூரம் கார் சென்றுள்ளதுடன், கார் திடீரென நின்றுள்ளது. அப்போது Read More

Read more