ரம்புக்கனையில் கடும் பதற்றம் – ஊரடங்கு அமுல்
ரம்புக்கனை காவல்துறை பிரிவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை தொடரும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
ரம்புக்கனையில் புகையிரத கடவைக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் நிலையைத் தொடர்ந்து காவல்துறையால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்ததுடன் நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியதால் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அப்பகுதி வழியாக செல்லும் அனைவரும் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.