X-PRESS PEARL: கொள்கலன்கள் கரை ஒதுங்கின!!

தீ விபத்துக்குள்ளான X-PRESS PEARL கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்துள்ள கொள்கலன்கள் மற்றும் சிதைவுகள் நீர்கொழும்பு மற்றும் அதனை அண்மித்த கடற்கரையில் ஒதுங்கியுள்ளன.

கரையொதுங்கியுள்ள கொள்கலன்களில் அபாயகரமாக பொருட்கள் காணப்படக்கூடும் என கடல் மாசுறுல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனால் குறித்த பொருட்களுக்கு அருகில் செல்லல் மற்றும் அவற்றை தொடுவதை தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

X-PRESS PEARL கப்பலில் பரவிய தீ, கப்பல் முழுதும் பரவியுள்ளதாக கடல் மாசுறுல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குறித்த கப்பலிலுள்ள கொள்கலன்களில் இருந்து இரசாயனப் பொருட்கள் அல்லது எண்ணெய் கசிவு எற்பட்டதா என்பது தொடர்பில் நாரா நிறுவனம் விசேட ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.

விசேட குழுவொன்று ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *