நாடாளாவியரீதியில் மூடப்பட்டன நாற்பது எரிபொருள் நிலையங்கள்!!

வாடிக்கையாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக நாற்பது எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது. எரிபொருள் நிலைய ஊழியர்களை அச்சுறுத்தி எரிபொருள் பெற்றுக் கொள்ள முயற்சித்தல் மற்றும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை போன்ற காரணங்களை முன்னிட்டே குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் கொள்வனவு செய்வதற்காக விடுக்கப்பட்ட எரிபொருள் கேள்வியும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்திருப்பதாகவும் எரிபொருள் Read More

Read more

சுன்னாகத்தில் எரிபொருளை விநியோகித்து விட்டுத்திரும்பிய எரிபொருள் தாங்கி, சாரதி மற்றும் உதவியாளர் மீதும் கொடூர தாக்குதல்!!!

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளை விநியோகித்து விட்டுத்திரும்பிய எரிபொருள் தாங்கி மீதும் சாரதி மற்றும் உதவியாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சனிக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் சந்தேகத்தில் 26 வயதான சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதான சகோதரர்கள் இருவரும் மதுபோதையில் இருந்துள்ளார்கள் என சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read more

எரிபொருள் விநியோகம் தொடர்பில் ‘Lanka IOC’ வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிலவற்றுக்கான எரிபொருள் விநியோகத்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இடைநிறுத்தியுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தானத்தின் விதிகள், ஒழுங்குமுறைகளை மீறியதால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளை பதுக்கி வைப்பதாகவும், வாகனங்களுக்கான எரிபொருள் அளவு உத்தரவை சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீறுவதாக முறைபாடு கிடைத்துள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, மாகொல தெற்கு, நால்ல, களனியின் பேத்தியகொட, மீரிகம ஆகிய இடங்களிலுள்ள 4 எரிபொருள் நிலையங்களுக்கான விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Read more

எரிபாருள் பெறுவதில் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிவு!!

தற்போது தட்டுப்பாடாக உள்ள எரிபாருளை பெறுவதில் ஏற்பட்ட மோதல் இறுதியில் கொலையில் முடிவடைந்தது. நிட்டம்புவ – ஹொரகொல்ல பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு – 14 பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று(20) ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காத்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது முச்சக்கரவண்டியின் சாரதி, எரிபொருளை பெற்று Read More

Read more