வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டு நிவாரணப் பணி உத்தியோகத்தர் மரணம்!!

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த நபர் இரத்தினபுரி – குருவிட்ட பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டு, உயிரிழந்தாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் இரத்தினபுரி- கிரியெல்ல பிரதேசத்தில் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் , சீரற்ற காலநிலையினால் 6 மாவட்டங்களில் 144 குடும்பங்களைச் சேர்ந்த 576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, 236 பேர் Read More

Read more

ஒருபுறம் வெள்ளப்பெருக்கு அபாயமாம், மறுபுறம் மின்சார உற்பத்திக்கு நீர் இல்லையாம்…. தடுமாற்றமாக பேசும் அரச நிறுவனங்கள்!!

அத்தனகலு ஓயா, களனி கங்கை, கின் கங்கை, நில்வளா கங்கை, பெந்தர கங்கை ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

Read more

தென்னாபிரிக்காவில் பெருவெள்ளம்…. 395 பேர் மரணம்!!

தென்னாபிரிக்காவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 395 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தென்னாபிரிக்காவின் குவாஜுலு – நேட்டல் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு நீர்நிலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமையும் அந்த பெருவெள்ளத்தில் சிக்கி பலர்  உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

Read more

வெள்ளத்தில் மூழ்கிய கிளிநொச்சியின் தாழ் நிலப் பகுதிகள்!!

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல தாழ் நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக தற்காலிக வீடுகளில் வசிக்கின்ற மக்களின்  வீடுகளுக்குள்ளும் மழை நீர் சென்றுள்ளது. கடந்த காலத்தில் நிரந்தர வீட்டுத்திட்டங்களுக்கு உள் வாங்கப்பட்டு ஆரம்ப கட்டக் கொடுப்பனவுகள் மட்டும் வழங்கப்பட்டு மிகுதி கொடுப்பனவுகள் வழங்கப்படாது வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்ய முடியாதுள்ள மக்கள் Read More

Read more

களு கங்கையின் நீர்மட்டம் உயர்வு! விடுக்கப்பட்டது அபாய எச்சரிக்கை!!

களு கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்படுகிறதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. களு கங்கை ஊடறுத்து செல்கின்ற பல இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் இரத்தினபுரி, நிவித்திகல, பெல்மடுல்ல, கஹாவத்தை மற்றும் எலபாத்த ஆகிய இடங்களில் சிறிய அளவில் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Read more