எதிர்வரும் 30 வரை விதிக்கப்பட்ட தடை….. கடுமையான எச்சரிக்கை!!
பொதுக் கூட்டங்கள், வெளிப்புற கூட்ட நிகழ்வுகளுக்கு நவம்பர் 30ஆம் திகதி வரையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீடுகளில் கூட 10 இற்கும் மேற்பட்ட வெளியாட்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டியினை சுகாதார அமைச்சு நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது.
மேலும்,
இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் இந்த தடை நடைமுறையில் இருக்கும் எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.