அடுத்த இரண்டு வார காலப் பகுதியில் ஊரடங்கா!!
எதிர்வரும் இரண்டு வார காலப் பகுதியில் பொதுமக்களின் நடவடிக்கைகளுக்கு அமைய, மீண்டும் ஊரடங்கு சட்டம் விதிப்பதா? அல்லது பயணக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவதா? என தீர்மானிக்கப்படும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்ஜித் பட்டுவன்துடுவ (Ranjith Badduvanthuduwa) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
பொதுமக்களின் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு தற்போதுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதா? இல்லையா? என்பது குறித்தும் கலந்துரையாடப்படும்.
மேலும்,
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் முயற்சி மக்களிடம் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடனேயே, மக்கள் அதிகளவில் நடமாடுவதாகவும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.