#Covid19

LatestNews

புதிய விகாரங்கள் கண்டுபிடிப்பு!! கொழும்பை மூடுங்கள் – அவசர கோரிக்கை!!

கொழும்பில் உள்ள மருந்தகங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கனைத் தவிர அனைத்து கடைகளையும் சில நாட்களுக்கு மூடுமாறு கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு செய்வதால் கொழும்புக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். இதனால் அவர்களின் குடும்பங்கள் மற்றும் பிற சமூகத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பரவலால் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக சமூகம் தமக்கு ஏற்படும் இழப்புகளை புறக்கணித்து, தாமாக முன்வந்து கடைகளை மூடி, Read More

Read More
LatestNews

அனைத்து வணிக வளாகங்களையும் மீண்டும் திறக்க அரசாங்கம் திடீர் அனுமதி!!

சுகாதார பரிந்துரைகளின்படி நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது. சுகாதார சேவைகள் இயக்குநரால் நேற்று வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களில் அனைத்து வணிக வளாகங்களையும் மூடுமாறு கூறியுள்ளார். எனினும் இன்று குறித்த சுகாதார வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டு வணிக வளாகங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய திருத்தத்திற்கு அமைய அனைத்து வணிக வளாகங்களும் திறக்கலாம். ஒரே நேரத்தில் 25 சதவீத வாடிக்கையாளர்களுக்கே இடமளிக்க முடியும் என்றும் கூறுகிறது. கொரோனா பரவலில் இருந்து பாதுகாக்க Read More

Read More
LatestNews

மாகாண எல்லையை கடக்க அனுமதி யாருக்கெல்லாம்??

மாகாண எல்லையை கடக்கக்கூடியவர்கள் தொடர்பான விபரங்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதல்களில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, சுகாதார சேவை, பொலிஸார், முப்படையினர், அரச ஊழியர்களின் உத்தியோகப்பூர்வ பயணங்கள், அத்தியாவசிய பொருள் விநியோகம், மிக நெருக்கமான உறவினர்களின் மரண வீடு (ஆவணம் அவசியம்), துறைமுகம் மற்றும் விமான நிலையங்களுக்கு பொருட்களை கொண்டு செல்வோர் (ஆவணம் அவசியம்) ஆகியோருக்கே மாகாண எல்லையை கடக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
LatestNews

யாழ் அரசாங்க அதிபர் முக்கிய அறிவித்தல் – அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று சற்று தீவிரமடைந்த நிலை காணப்படுகின்ற அதே வேளை இறப்புகளும் அதிகரித்து செல்கின்ற போக்கு காணப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதுள்ள நிலையில் அரசாங்கம் அறிவித்திருக்கிற புதிய சுகாதார விதிமுறைகளை மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் சுகாதாரத் திணைக்களம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் இணைந்து செயற்படுத்தப்படுகின்றன. Read More

Read More
LatestNews

குழந்தை பிறந்து 6 நாட்களின் பின் கொரோனாவால் உயிரிழந்த பெண்!!

கம்பஹா மருத்துவமனையில் குழந்தையை பிரசவித்த 33 வயது பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். மகப்பேறுக்காக கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் குழந்தை பிரசவித்து 6 நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார். இதில் தெல்கொட பகுதியைச் சேர்ந்த பெண்ணே உயிரிழந்துள்ளார். மேலும், பிறந்த குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More
LatestNews

தீவிர நிலையை அடைந்தது மேல் மாகாணம்! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

மேல் மாகாணத்தில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் சுமார் 50 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு ஒட்சிசனின் உதவி தேவைப்படுகின்றது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லால் பனாபிடிய தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். இதேவேளை, கொழும்பில் அடையாளம் காணப்படும் நோயாளர்களில் 90 Read More

Read More
LatestNews

மேலும் பல இறுக்கமான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ள சுகாதார அமைச்சு!!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சு புதிய சுகாதார வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. குறித்த வழிகாட்டல்களுக்கு அமைவாக நேற்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உடற்பயிற்சிக் கூடங்கள், உடற்கட்டமைப்பு நிலையைங்கள், மசாஜ் பார்லர்கள், சிறுவர் பூங்காக்கள், இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், கடற்கரையில் ஒன்றுகூடுதல், நீச்சல்தடாகங்களைப் பயன்படுத்துவதற்கும், எதிர்வரும் 31ஆம் திகதிவரை தடை விதிக்கப்படுவதாக புதிய சுகாதார வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More
LatestNews

வடமாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரனிற்கு Covid19 உறுதி!!

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனுக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த சமயத்தில், அவருடன் பழகியவரென்ற அடிப்படையில், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read More
LatestNews

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கடடாயம்!!

2021 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்காக 9 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளும் 14 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

Read More
LatestNews

தடுப்பூசியை செயலிழக்கச்செய்யும் புதிய வைரஸ் இலங்கையில் உருவாகும்! இறுதியில் ஏற்படப்போகும் ஆபத்து!!

இலங்கையில் இந்த ஆண்டின் இறுதியில் தற்போதைய தடுப்பூசியை செயலிழக்கச்செய்யும், கொரோனா வைரஸின் புதிய கடுமையான திரிபு உருவாகும் ஆபத்து காணப்படுகின்றது. புதிய கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஒரு ஆபத்தான அச்சுறுத்தலை நாங்கள் எதிர்கொள்கிறோம் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு கொரோனா தொற்றுநோயின் 4 வது அபாய நிலையில் இருப்பதாகவும் அந்த சங்கம் அறிவித்துள்ளது. மேலும், இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சங்கத்தின் செயலாளர் டாக்டர் செனால் பெர்னாண்டோ வலியுறுத்துகிறார். Read More

Read More